(immune system) இம்மியுன் சிஸ்டம் என்றால் நோய் எதிர்ப்பு சக்தி என்றுதான் நாம் பொருள் கொள்கிறோம். இம்மியுன் சிஸ்டம் என்றால் உண்மையில் பாதுகாப்பு சக்தி என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். மனித உடலின் முழுமையான செயல்பாட்டுக்கும் ஆரோக்கியத்துக்கும் இந்த இம்மியுன் சிஸ்டமே துணை புரிகிறது. இந்த பாதுகாப்பு சக்தி (இம்மியுன் சிஸ்டம்) பலகீனமாக இருக்கும் வேளைகளில்தான் மனிதன் நோய்வாய் படுகிறான்.

பாதுகாப்பு சக்தி (இம்மியுன் சிஸ்டம்) என்றால் என்ன

இம்மியுன் சிஸ்டம் என்று தனியாக உடலில் எதுவும் கிடையாது. மனித உடலின் இயற்கை தன்மைகளில், மனித உடலின் இயற்கை வேளைகளில் ஒன்றுதான் இந்த இம்மியுன் சிஸ்டம். மனித உடல் தன்னை தானே பாதுகாக்கும் வேலையைத்தான் இம்மியுன் சிஸ்டம் என்று அழைக்கிறார்கள். மனித உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்லுக்கும் தனி அறிவு இருக்கிறது, ஒவ்வொரு செல்லுக்கும் தன்னை பாதுகாத்துக் கொள்ளும் அறிவு இருக்கிறது.

என்னைப் பொறுத்தவரை இம்மியுன் சிஸ்டம் என்பது நோய் வந்த பிறகு அதைச் சரி செய்வது அல்ல, அல்லது நோய்கள் உருவாகாமல் தடுப்பது மட்டுமல்ல, மாறாக உடலின் முழுமையான பாதுகாப்புக்கு உறுதுணையாக இருக்கும் சக்திதான் இம்மியுன் சிஸ்டம். உடலின் பாதுகாப்பு சக்திக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்.

ஒருவர் தன்னையே அறியாமல் கெட்டுப்போன உணவை உண்ண முயற்சி செய்தால், கை முதலில் காட்டிவிடும், தோளில் பிசுபிசுப்பு காட்டிவிடும், அடுத்தது மூக்கு அறிகுறி காட்டும், கெட்ட வாடையைக் கண்டுபிடித்து காட்டும். அதைக் கவனிக்காமல் வாயில் போட்டால், வாய் குமட்டல் உணர்வைக் கொடுக்கும், அதையும் கண்டுகொள்ளாமல், உடலை மீறி மென்று விழுங்கினால். உடல் வாந்தி எடுக்கும், அந்த வாந்தியைத் தடுத்தால் வயிற்றுப்போக்கு ஏற்படும். அந்த வயிற்றுப் போக்கையும் தடுக்கும் போது, அந்த கெட்டுப்போன உணவு உடலின் உள்ளேயே தங்கி பல கேடுகளை உடலுக்கு உண்டாக்கும்.

இப்படி தோல், மூக்கு, நாக்கு, வயிறு, குடல் என உடலின் எல்லா பாகங்களும் உடலுக்குள் கெட்ட பொருள் சென்றுவிடாமல் தடுக்கும், உடலின் அறிகுறிகளை எல்லாம், மீறிச் செய்பவர்கள், தனக்குத்தானே சூனியம் வைத்துக்கொள்பவர்கள். கெட்டுப் போன உணவு உடலின் உள்ளே சென்ற பிறகுதானே உடல் உபாதைகள் உருவாகும், ஆனால் உடலின் தன்மையை கவனித்தால், உடல் கெட்டுப்போன உணவு உடலுக்குள் செல்லாமலேயே பாதுகாக்கிறது. அந்த அளவுக்கு மிக பாதுகாப்பாக இந்த உடலை இறைவன் வடிவமைத்திருக்கிறார்.

பாதுகாப்பு சக்தி (இம்மியுன் சிஸ்டம்) பலப்படுத்த

மனித உடல் முழுமையாக தானியங்கி (Automatic) செயல்படும் முறையில்தான் இறைவன் வடிவமைத்திருக்கிறார். அதனால் பாதுகாப்பு சக்தியை (இம்மியுன் சிஸ்டம்), அதிகரிக்க என்று எதையும் செய்ய முடியாது, பாதுகாப்பு சக்தி (இம்மியுன் சிஸ்டம்) பலப்படுத்த எதையாவது செய்யவோ,சாப்பிடவோ தேவையும் கிடையாது.

மனித உடல் அமைப்பு

மனித உடல் மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மனிதன் உட்கொள்ளும் ஒவ்வொரு வேலை உணவும், அந்த உணவிலிருந்து உருவாகும் சக்தியும் மூன்றாகப் பிரிக்கப்பட்டு உடலுக்கு பயன்படுகிறது.

உடலின் சக்தியில் 33% உடல் செயல்பாட்டுக்கும், உடலின் சக்தியில் 33% உடல் செரிமானத்துக்கும், உடலின் சக்தியில் 33% உடல் பாதுகாப்புக்கும் செயல்படுகிறது. இந்த செயல்களுக்கு பின்பு மீதமிருக்கும் சக்திகள், சேமிப்பு சக்தியாகவும், அவசரக்கால சக்தியாகவும், உடலில் சேமிக்கப்படுகிறது.

மீதமிருக்கும் சேமிப்பு சக்திதான் மனிதனின் அவசரக்காலத்தில், உதாரணத்துக்கு நாய் துரத்தினாளோ, உயிருக்கு, உடைமைக்கு அச்சுறுத்தல் வந்தாலோ, தன்னைப் பாதுகாத்துக்கொள்ள உதவுகிறது. இரசாயன மருத்துகளை நெடுநாட்கள் சாப்பிடுபவர்களுக்கு சேமிப்பு சக்தி என்று எதுவும் இருக்காது. அதனால் தான் நெடுநாட்கள் ஆங்கில மருந்துகள் சாப்பிடுபவர்கள், கொடிய உயிர்க்கொல்லி நோய்களுக்கு ஆளாகிறார்கள். அல்லது ஏதாவது நோய் வந்தால் முழுவதுமாக உடலாலும், மனதாலும் உடைந்து, சோர்ந்துவிடுகிறார்கள்.

பாதுகாப்பு சக்தியை (இம்மியுன் சிஸ்டம்) பலப்படுத்தும் வழிமுறை

மனித உடலில் உருவாகும் எல்லா சக்திகளும் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு செயல்படுகிறது என்று மேலே பார்த்தோம். அப்படி இருக்கையில், தேவையற்ற உடல் உழைப்பைக் குறைத்து, ஓய்வெடுத்தால் உடல் செயல்பாட்டுக்கும் ஒதுக்கப்பட்ட 33% சக்தி மிச்சப்படும், உடலுக்கு ஒத்துக்கொள்ளக் கூடிய எளிமையான உணவுகளைச் சாப்பிட்டால் செரிமானத்துக்கு ஒதுக்கப்பட்ட 33% சக்தி மிச்சமாகும். இப்படி உழைப்பிலும், உணவிலும் செலவழிக்க கூடிய சக்தியை சேமித்தல். சேமித்த சக்திகள் முழுமையாக பாதுகாப்பு சக்திக்குத் தரப்பட்டு, உடலின் பாதுகாப்பு சக்தி (இம்மியுன் சிஸ்டம்), பலப்படும்.

இதை விட்டுவிட்டு, எந்த மருந்து மாத்திரைகள் சாப்பிட்டாலும் பாதுகாப்பு சக்தியை (இம்மியுன் சிஸ்டம்) மேன்படுத்த முடியாது. ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் மனித உடல் முழுமையாகத் தானியங்கி (Automatic) செயல்படும் முறையில் தான் இறைவன் வடிவமைத்திருக்கிறார். யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. எல்லாம் உடலின் செயல்.

தடுப்பூசிகள் தேவையில்லை

மனித உடலுக்கு இயற்கையாகவே பாதுகாப்பு சக்தியும், நோய் எதிர்ப்பு சக்தியும் இருப்பதால். தடுப்பூசிகள் என்று எதுவுமே தேவையில்லை. தடுப்பூசி என்பது வெறும் வணிக நோக்கம் கொண்டதே ஒழிய, அதில் உண்மையில்லை.

Comments

comments