The Law of attraction, ஈர்ப்பு விதி- என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த ஈர்ப்பு விதி எப்படிச் செயல்படுகிறது என்பதில் தான் இப்போது பிரச்சனை. ஆளுக்கு ஒரு மாதிரியாகச் சொல்கிறார்கள். பெரும்பாலும் நினைத்தால் நடக்கும், ஆசைப்பட்டால் நடக்கும், கனவு கண்டால் நடக்கும், என்பதுதான் பலர் கூறும் ஈர்ப்பு விதியாக இருக்கிறது.

நினைப்பதும் ஆசைப்படுவதும் உண்மையில் நடக்க ஆரம்பித்தாள், இந்த உலகமே தலைகீழாக இருந்திருக்கும். இந்த உலகின் ஒவ்வொரு மனிதனும் அரசனாக அல்லவா இருந்திருப்பான். பசியோடு உறங்கப் போகும் மனிதனின் அடிப்படை ஆசையே உணவு மட்டும்தான், ஆனால் அதை கூட அடைய முடியாமல் போகிறது. ஏழைகளின் கனவு பணம், பலருக்கு கனவாகவே போகிறது, இறுதிவரை வசதி வாய்ப்புகள் இல்லாமல் போகிறது. கஷ்டத்தில் உள்ளவனுக்கு நிம்மதி தேவை, அனால் அது பலருக்கு கிடைப்பதே இல்லை. அப்படியானால் ஈர்ப்பு விதி என்றால் என்ன? அது எப்படி செயல்படுகிறது?.

ஈர்ப்பு விதி என்பது மனிதன் ஆசைப்படுவதையோ, அவன் விரும்புவதையோ, அவன் கனவு காண்பதையோ, அவன் நம்புவதையோ கொடுப்பது அல்ல. ஒரு மனிதனுக்கு என்ன தகுதி இருக்கிறதோ அதைக் கொடுப்பதுதான் ஈர்ப்பு விதி.

Law of attraction? ஈர்ப்பு விதி என்பது எப்படி செயல்படுகிறது என்றால. இயற்கையின் படைப்பில் மனிதனை அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்ய பட வேண்டும். அதுதான் சட்டம். ஒரு மனிதனுக்கு ஒரு தேவை, ஆசை ஏற்படும் போது. அதை அடைவதற்குரிய வழிகாட்டுதலும், வழிகளும், அறிவும் அவனுக்கு வழங்கப்படும். அதை முறையே பயன்படுத்தினால், அவன் ஆசைப்பட்ட அனைத்தும் கிடைக்கும்.

இயற்கை பேசுவதை, அது காட்டும் அறிகுறிகளை கொஞ்சம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். நம் வாழ்கையில், நம்மை சுற்று நடப்பதை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தல், அனைத்தையும் நிச்சயம் அடையலாம். நீங்கள் ஆசைப்படும் அனைத்தும் நடக்க வேண்டுமா?. மிகச் சுலபம், அதை அடையத் தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஆசை நிச்சயம் நிறைவேறும்.

 

Comments

comments