தமிழர்கள் இயற்கையாகவே புத்திசாலிகள். இயற்கையின் அறிவும், இயற்கையின் தொடர்பும் உடையவர்கள். அவர்களை எப்படி மருத்துவர்கள் ஏமாற்றினார்கள், எப்படி ஆங்கில மருத்துவம் மட்டுமே உலகில் சிறப்பானது என்று நம்ப வைத்தார்கள் என்று பல நாட்கள் சிந்தித்தேன். இறுதியில் கண்டுகொண்டேன்.

ஆங்கிலேயர்கள் வருகைக்கு அனைத்து இயற்கை மருத்துவங்களும் பயன்பாட்டில் இருந்தது. ஆங்கிலேயர்கள் வருகைக்குப் பின் அனைத்து இயற்கை மருத்துவங்களையும் அழிக்கும் வேளையில் இறங்கினார்கள். இயற்கை மருத்துவத்தைப் பற்றிய பயத்தை மக்களின் மீது விதைத்தார்கள். ஆங்கிலேயர்களும் ஆங்கில மருத்துவர்களும் கடவுகளை போல் மக்கள் மனதில் விதைத்தார்கள். இந்தியாவின் பாரம்பரிய மருத்துவர்களை முட்டாள்கள் போலவும், ஏமாற்றுக்காரர்கள் போலவும் மக்களை நம்ப வைத்தார்கள். மற்றுமொரு இடத்தில் இயற்கை மருத்துவர்களை மிரட்டுவதும், வரி போடுவதும், லைசன்ஸ், சான்றிதழ் போன்று பல விசயங்களைக் காட்டி மிரட்டி அவர்களைத் தொழிலில் இருந்து வெளியேற வைத்தார்கள்.

இந்திய சுதந்திரம் அடைந்த பின்பு ஏன் நம் பாரம்பரிய மருத்துவம் மறுபடியும் எழுச்சி அடையவில்லை?. அதற்குக் கரணம் சினிமா?. மருத்துவர்கள், மருந்து கம்பனிகள், பெரிய காப்ரேட் நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து சினிமா, தொலைக்காட்சி, வானொலி, நாளிதழ் போன்ற பொது ஊடகங்கள் மூலமாக மக்களிடம் ஆரோக்கியம், மருத்துவம் மற்றும் மனித உடல் பற்றிய தவறான விசயங்களை மக்களிடம் கொண்டு சேர்த்தார்கள்.

பழைய சினிமாக்களில் நீங்கள் அதிகமாகப் பார்க்கலாம். ஒரு விபத்து நடக்கும் ஒருவர் வந்து “பட்டணத்துப் பெரிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுங்கள் அவர் காப்பாற்றுவார் என்று சொல்வார்”. ஒரு பெண் பிரசவ வேதனையில் இருப்பார் அல்லது குழந்தை பிறக்கக் கஷ்டப்படுவார் உடனே, நாட்டு மருத்துவர் அல்லது ஒரு பாட்டி வந்து “பட்டணத்துப் பெரிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுங்கள் அவர் காப்பாற்றுவார் என்று சொல்வார்”.

இப்படியே சிறிய நோயா?, கொடிய நோயா?, விபத்தா?, பிரசவ கஷ்டமா?, ஆண்மை இல்லையா? எந்தத் தொந்தரவு இருந்தாலும் “பட்டணத்துப் பெரிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுங்கள் அவர் காப்பாற்றுவார்” என்று சினிமாக்களில் காட்டி மக்களின் மனதில் பதிய வைத்தார்கள். மக்களும் போது ஊடகங்களில் வருவதை நம்பி ஆங்கில மருத்துவத்துக்கு அடிமை ஆனார்கள்.

இப்படி அவர்கள் உருவாக்கிய பிம்பத்தை உடைக்கப் பல நல்ல உள்ளங்கள் உழைத்து வருகிறார்கள். மக்கள் ஆரோக்கியமாக நிம்மதியாக வாழ வேண்டும் என்று எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் உழைக்கிறார்கள். ஆனால் அந்த நல்ல உள்ளங்களைப் புரிந்துகொள்ளாமல் முட்டாள்கள் என்றும் ஏமாற்றுகாரர்கள் என்றும் சிலர் விமர்சிக்கிறார்கள்.

இந்த ஆங்கில மருத்துவத்தின் பிம்பத்தை உடைத்திருக்கிறது “மெர்சல்”. பணத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்கும் பல பரதேசிகள் மருத்துவர்களாக இருக்கிறார்கள் என்று கட்டுகிறது “மெர்சல்”. எந்த சினிமாவை வைத்து நம்மை ஏமாற்றினார்களோ, அதே சினிமாவை வைத்து உடைக்க முயற்சி செய்திருக்கிறார் “இயக்குநர் அட்லி மற்றும் நடிகர் விஜய்”. படத்தைப் பார்த்து கைதட்டிவிட்டு மட்டும் வராமல் அதில் சொல்லப்படும் கருத்தைக் கொஞ்சம் மனதில் பதித்து வையுங்கள்.

சுகபிரசவம் ஆக கூடாது என்று கற்பமுற்ற பெண்களுக்கு, இரசாயனங்களை சத்து மருந்து என்று ஏமாற்றி விற்பது. சுக பிரசவம் ஆகக்கூடிய பெண்ணுக்குக் கொடி சுற்றி உள்ளது, இரத்தம் பற்றவில்லை, பன்னீர் குடம் உடைந்துவிட்டது என்று பொய்களை சொல்லி மிரட்டி அறுவை சிகிச்சை செய்வது.

தோளின்மேல் ஒரு கீறலை போட்டுத் தைத்துவிட்டு அறுவை சிகிச்சை செய்தாகி விட்டது என்று போய் சொல்லி இலட்சக் கணக்கில் பணம் பறிப்பது. மூச்சுத் திணறல் என்று மருத்துவமைக்கு சென்றால் இருதய கோளாறு என்று பொய் சொல்வது. இடுப்பு வலி என்று மருத்துவ மனை சென்றால் கிட்னி கோளாறு என்று பொய்சொல்லி கிட்னி திருடுவது. இப்படி அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

ஆங்கில மருத்துவம் மட்டுமல்ல எல்லா மருத்துவமும் பணம் செய்யம் தொழிலாக மாறிவிட்டது. உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் காப்பாற்றிக்கொள்ள ஒரே வழி, உங்கள் உடலைப் பற்றிய அடிப்படை அறிவை நீங்கள் பெற்றுக்கொள்வது மட்டுமே.

என்னையும் சேர்த்து யாரையும் நம்பாதீர்கள். இன்றைய காலகட்டத்துக்கு மிகத் தேவையான மெர்சல் என்ற திரைப்படத்தை தந்த இயக்குநர் அட்லி மற்றும் நடிகர் விஜய் அவர்களுக்கு எனது நன்றி. இந்தப் படத்தில் மருந்து கம்பனிகளை விட்டுவிட்டீர்கள். மருந்து கம்பனிகளின் அட்டகாசத்தை திரைப்படமாக்குங்கள். மெர்சல்2, வேண்டும்.

Comments

comments