எனது மற்ற கட்டுரைகளை படித்தீர்களே ஆனால், உங்களுக்குப் புரிந்திருக்கும் மனிதனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்து உடல் உறுப்புகளும் அவன் வாழ்நாள் முழுமைக்கும் பயன்படுத்தவே கொடுக்கப் பட்டிருக்கிறது. அதனால் சிறிது வயது கூடியதும் உடலில் அந்தப் பாகம் வேலை செய்யவில்லை, இந்தப் பாகம் பலமில்லை என்றெல்லாம் இருக்கக் கூடாது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஏன் சில ஆண்களுக்கு ஆண்மை வீரிய குறைபாடுகள் ஏற்படுகிறது என்று பார்ப்போம்.

மனம் சமமின்மை
மன சமமின்மையே மிக அதிகமான ஆண்களுக்கு ஆண்மை வீரிய குறைபாட்டை ஏற்படுத்துகிறது. குடும்பத்திலும், வேலையிடங்களிலும், சமுதாயத்திலும் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளே மனதில் பதிவாகி ஆண்மையின் வீரியத்தைக் குறைக்கிறது.

மனதின் பதிவுகளில் இருக்கும் கவலை, பயம் போன்ற தீய எண்ணங்கள் மிக கேடான ஆண்மை கோளாற்றை ஏற்படுத்தும். ஒருவர் மனதினுள் பதிவான பயம் கவலை போன்ற எண்ணங்கள் சம்பந்தப்பட்டவருக்கே தெரியாமல் கூட இருக்கலாம். ஆனால் அந்தப் பதிவுகள் மனதின் உள்ளேயே இருந்து கொண்டு சம்பந்தப்பட்டவரின் உடலின் ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் கெடுத்துக்கொண்டிருக்கும்.

மனதில் கவலையோ பயமோ இருக்கும் போது மனைவியுடன் கூட வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், மனம் அதற்கு ஒத்துழைக்காது. அதையும் மீறி ஆண்கள் முயற்சிக்கும் போது முழுமையாக ஈடுபட முடியாது. விந்து முந்துதல், பாதியில் சுருங்குதல், மனதில் மற்ற எண்ணங்கள், பயம், கவலைகள் தோன்றுவது. உடல் வலிகள், சோர்வு போன்றவை ஏற்படலாம்.

மனதை அமைதியாக எந்தக் கவலையும், பயமும் இல்லாமல் வைத்திருப்பதே இதற்கு ஒரே தீர்வு. மனதைப் பற்றிய ஒரு இரகசியம் சொல்கிறேன். இந்த உலகத்திலும் உங்கள் வாழ்க்கையிலும் எல்லாவற்றையும், உங்களால் மாற்றிவிட முடியாது என்ற தெளிவும். இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் தனி தனியான மனமும் குணமும் இருப்பதால் அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குனாதசியங்களுடன் தான் இருப்பார்கள் என்ற தெளிவும் இருந்தால். உங்களுக்கு எந்தக் கவலையும் பயமும் ஏற்பட வாய்ப்பே இல்லை. அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வந்துவிடும்.

மருந்து மாத்திரைகள்
தலைவலிக்குச் சாப்பிடும் மாத்திரையில் இருந்து, உடலின் எந்த நோய்க்கு எந்த வகையான இரசாயனம் கலந்த மருந்து மாத்திரைகள் உட்கொண்டாலும் அது கண்டிப்பாக ஆண்மையைப் பாதிக்கும். நீங்கள் சாப்பிடும் மாத்திரையின் அளவு சிறிதாக இருந்தாலும் அது விளைவிக்கும் பக்கவிளைவுகளின் அளவு பெரிதாக இருக்கலாம்.

இரசாயன உணவுகள், பானங்கள், மருந்து மாத்திரைகள் பயன்படுத்துபவர்களின் உடல். உடலின் சேரும் இரசாயனங்களை வெளியேற்றுவதிலேயே அதிக உடலின் சக்தியை செலவழிப்பதால். உடல் உறவு கொள்ளும் அளவுக்கு உடல் பலமும் மன பலமும் இருக்காது. அதையும் மீறி ஆண்கள் முயற்சிக்கும் போது முழுமையாக ஈடுபட முடியாது.

உடல் உறுப்புகளின் பலகீனம்
உடல் உறுப்புகளில் எதாவது ஒரு உறுப்பில் பலகீனங்கள் அல்லது நோய்கள் ஏற்படும் போது. அந்தப் பலகீனத்தை சரி செய்ய உடலின் பெரும்பாலான சக்தி செலவழிக்கப்படும். இது போன்ற நேரங்களில் இயல்பாகவே ஆண்களுக்கு உடலுறவில் நாட்டம் இருக்காது. உடலின் அறிவைப் பொறுத்தவரையில் உடல் உறவு என்பது மூன்றாவது பட்ச தேவையே. உடலும் மனமும் ஆரோக்கியமாக இருந்தால் மற்றும் ஆரோக்கியமாக இருக்கும் வரை மட்டுமே உடலுறவில் நாட்டம் இருக்கும்.

இது ஒன்றும் பெரிய பிரச்சனை அல்ல. இதைக் குணப்படுத்த எந்த வகையான மருந்து மாத்திரையும் தேவையில்லை. உடல் தானாகவே நோய்களையும் பலமிழந்த உறுப்புகளைச் சரிசெய்த பின்பு ஆண்மையும் உடலுறவில் நாட்டமும் தானாய் திரும்ப வந்து விடும்.

மருந்துகள் பயன் தராது
ஆண்மை வீரிய குறைவு ஏட்பட்டால் அல்லது உடலுறவில் ஈடுபடும் போது ஏதாவது குறைபாடுகள் ஏற்பட்டால் சிலர், ஆங்கில மற்றும் சித்த மருந்துகளை நோக்கி ஓடுகிறார்கள். ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், ஆண்மை வீரியத்துக்குப் பயன்படுத்தும் அனைத்து மருந்துகளும், மிக கேடான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் மற்றும் ஆண்மையை இன்னும் பலகீனப்படுத்தும்.

மேலும் ஆண்மை பெண்மை கோளாறுகளையும் அதற்கான தீர்வையும் பற்றித் தெரிந்துகொள்ள எனது மற்ற கட்டுரைகளை வாசியுங்கள். http://aarokia.com என்ற இணையப்பக்கத்தில் படிக்கலாம்.

உண்மை காரணத்தை கண்டுபிடித்தல் ஒழிய எந்தப் பலகீனத்தையும், உடல் உபாதையையும் குணப்படுத்த எவராலும் முடியாது.