ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்கையில் ஒரு ஆசை, ஒரு தேடுதல் இருக்கும். அவன் வாழ்க்கையின் லட்சியமாக எதை நினைத்தானோ அதை அடையத் துடிப்பான், அடைந்த பின்பு புதிய தேவையை உருவாக்குவான். மனிதனின் ஆசைக்கும், தேவைக்கும் ஒரு முடிவே கிடையாது. அவனின் ஆசையையும் கட்பனையையும் தேடியே ஓடிக்கொண்டே இருப்பான்.

ஒரு கால கட்டத்தில் நான் தேடிய எதுவுமே உண்மை இல்லை. அனைத்துமே அழியக் கூடியது என்று உணரும் சமயம் மரணம் வந்து விடுகிறது. கடைசி வரையில் மனித வாழ்வின் நோக்கம் அறியாமல் வாழ்வை முடித்துக் கொள்கிறான். ஏன் பிறந்தோம்?, ஏன் வாழ்கிறோம்?, ஏன் மரணிக்கிறோம்?, மரணத்துக்குப் பின் என்ன நடக்கும்?. இப்படி எதுவுமே தெரியாமல், அறியாமல் அலையும் மனிதனை, நெறிப்படுத்த பயன்படும் ஒழுக்கத்துக்குப் பெயர்தான் ஆன்மீகம்.

ஆன்மிகம் என்பது ஒரு மதம் சார்ந்த விஷயமல்ல. மதத்தில் ஆன்மீகம் உண்டு, ஆனால் ஆன்மிகத்தில் மதமில்லை. தன்னை, தன் சுயத்தை அறியும் வழிமுறையே ஆன்மீகம். ஆன்மிகத்தை நம் முன்னோர்கள், மனிதனின் பக்குவ நிலைக்கு ஏற்ப நான்கு நிலைகளாகப் பிரித்தார்கள். பக்தி, கர்ம, கிறியா, ஞான என்று நன்கு வழிமுறைகள் உண்டு. இவற்றில் உயர்வு தாழ்வு என்று சொல்ல முடியாது, மனிதனின் மனநிலைக்கு ஏற்ப அவனுக்கு உகந்ததை தேர்ந்தெடுக்கலாம்.

இந்த உலகத்தில் எதை பற்றி கேட்டலும் மனிதனுக்கு தெரியும், கம்ப்யூட்டர், அறிவியல், பூலோகம், மறுத்தும், கணிதம் என எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறான், அனால் அவன் யார் என்பது மட்டும் அவனுக்குத் தெரியாது. அதை தேடி அடைய தைரியமில்லாமல், அடுத்தவர் அனுபவங்களையும், கட்டுக் கதைகளையும் நம்பிக்கொண்டிருக்கிறான்.

இதில் வேடிக்கை என்னவென்றால், அவனுக்கே ஒன்றும் தெரியாது, ஆனால் அந்த அறியாமையை அவன் குழந்தைகளுக்கும் மனதில் பதிய வைக்கிறான். தன்னை அறிவது, தன்னை பற்றிய உண்மைகளை தனது சொந்த அனுபவங்கள் மூலம் அறிவது மட்டுமே ஆன்மிகம்.