நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா என்று அடுத்தவரோ அல்லது மருத்துவரோ கூறக் கூடாது. உங்கள் உடல் தான் கூற வேண்டும். உங்கள் உடலின் செயல்பாட்டை வைத்து உங்கள் ஆரோக்கியத்தை அறிந்து கொள்ளுங்கள்.

1. பசி – குறைந்தது 2 வேலை உண்மையான பசி இருக்க வேண்டும்

2. ‎பசி இல்லாமல் சாப்பிடும் ஆசை உருவாகக் கூடாது

3. ‎தாகம் – தாகம் அளவாக இருக்க வேண்டும்

4. சோர்வு – காரணம் இல்லாமல் அசதி, சோர்வு இருக்கக் கூடாது

5. ‎தூக்கம் – படுத்த 10 நிமிடத்தில் தூங்க வேண்டும், தூக்கம் நிம்மதியாக இருக்க வேண்டும். தூக்கத்தில் எதற்காகவும் காலை வரை எழுந்திருக்கக் கூடாது

6. ‎தூங்கி எழும் போது மனம் அமைதியாக, உடல் சுறு சிறுப்பாகவும், உச்சாகமாகவும் இருக்க வேண்டும்

7. ‎மன நிம்மதி – மனம் எப்பொழுதும் அமைதியாக இருக்க வேண்டும். பயம், துக்கம், கவலை, எரிச்சல், பொறாமை இருக்கக் கூடாது. ‎எதைப் பற்றியும் பேராசை, ஏக்கம், இருக்கக் கூடாது.

8. ‎தினம் மலம் கழிக்க வேண்டும். நீங்கள் சாப்பிடும் உணவின் அளவுக்கு மலம் வெளியேற வேண்டும்.

9. ‎சொந்த வேலை, அன்றாட வேலைகளைச் செய்யும் போது எந்தச் சோர்வும், வலியும், அசதியும் இருக்கக் கூடாது.

10. ‎உடலின் உள், வெளி உறுப்புகளில் எந்தத் தொந்தரவும் இருக்கக் கூடாது.

இந்தப் பத்தும் சரியாக இருந்தால் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். எத்தனைத் தொந்தரவு இருக்கிறதோ, அவ்வளவு ஆரோக்கியம் குன்றி இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இந்தப் பத்தும் சரியாக இருந்தும் மருத்துவ சோதனை உங்களை நோயாளி என்று சொன்னால், அங்கே ஒரு ஏமாற்று வேலை நடக்கிறது என்று அர்த்தம்.

ஆரோக்கியமாக வாழ்வது எப்படி?. மற்ற கட்டுரைகளை படித்துப் பாருங்கள்.