ஆரோக்கியம் இலவசம் தான், ஆனால் நோயாளிகளாக உருவாக மட்டுமே பணம் செலவழிக்க வேண்டியது வரும்.

ஆரோக்கியமாக வாழ என்ன செய்யவேண்டும் என்று கேட்டால்.

1. அதை சாப்பிட வேண்டும், இதை சாப்பிட வேண்டும், அதை சாப்பிட கூடாது, இதை சாப்பிட கூடாது.

2. காலையில் எழுந்தவுடன் 4 க்லாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.

3. எவ்வளவு தண்ணீர் குடிக்கின்றோமோ அவ்வளவு நல்லது.

4. எல்லா பழங்களையும் சாப்பிட கூடாது. கூறிப்பாக நோய் கண்டவர்கள் இரவில் பழங்கள் சாப்பிட கூடாது.

5. பார்த்து பார்த்து பயந்து பயந்து சாப்பிட வேண்டும்

6. உணவு வகைகளை நன்றாக ஆராய்ந்து பின்புதான் சாப்பிட வேண்டும்

7. அதிகம் உடல் பயிற்சி செய்ய வேண்டும்

8. எல்லோராலும் ஆரோக்கியமாக வாழ முடியாது.

9. ஆரோக்கியமாக வாழ்வது மிக கடினம்

10. ஆரோக்கிமாக வாழ நிறைய செலவு செய்ய வேண்டும்

11. ஆரோக்கியமாக வாழ சத்து மாத்திரைகள், சத்து உணவுகள் சாப்பிட வேண்டும்

12. வருடா வருடம் உடல் பரிசோதைக்கு வரவேண்டும்.

13. மருத்துவர் சொல்வதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

14. உடலில் சின்ன தொந்தரவு வந்தாலும் மருத்துவரை நாட வேண்டும்.

இப்படி பல விசயங்களை நம்மிடம் சொல்வார்கள். நமக்கும் எல்லாம் நம் நன்மைக்காகதான் சொல்கிறார் என்று தோன்றும்.

உண்மை என்ன வென்றால் நோயாளியாக மாரதான் அதிகம் செலவுகள் செய்ய வேண்டும், அதிக உழைப்பு வெண்டும். ஆரோக்கியம்  இலவசம்தான்.

ஆரோக்கியமாக வாழ வழி சொல்வதுப் போல், நோயாளிகளாக மாற வழி சொல்வதுதான் இன்றைய ஆங்கில மருத்துவத்தின் கேடு கெட்ட வியாபார உக்தி.

இன்றைய மருத்துவ வியாபாரிகள் ஆரோக்கியமாக வாழ வழி சொல்வது போல் நோயாளிகளாக மாற வாழி சொல்கிறார்கள். மருத்துவர் சொல்கிறார், விஞ்ஞானி சொல்கிறார் என்று நாமும் நம்புகிறோம். ஆனால் அந்த விஞ்ஞானியும் மருத்துவரும் ஏதோ ஒரு காப்ரெட் கம்பனியின் அடிமை என்பதை மறந்து விட்டோம்.

ஒருவர் நோயாளியாக மாற பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம். ஒரு ஆங்கில மருத்துவரை சென்று பார்த்தால் போதும். உங்கள் உடலில் அது அதிகம், இது அதிகம், அது குறைவு, இது குறைவு என்று ஏதாவது ஒரு பொய்யை சொல்லி உங்களை நோயாளிகளாக மாற்றிவிடுவார்கள்.

நன்றாக புரிந்துக் கொள்ளுங்கள், ஆங்கில மருத்துவம் என்பது சேவையல்ல வியாபாரம், வியாபாரிகளின் ஒரே நோக்கம், லாபம். பணம் மட்டுமே அவர்களின் நோக்கம், நிங்கள் நோயாளிகளாக இருக்கும் வரை தான் அவர்களுக்கு வருமானம்.

ஆரோக்கியமாக வாழ வழி
மன்னிக்க வேண்டும், உங்களுக்கு வேறு வழியே கிடையாது, உங்களுக்கு இருக்கும் ஒரே வழி ஆரோக்கியமாக வாழ்வது மட்டும்தான். எந்த முயற்சியும், எந்த உழைப்பும் இல்லாமல், கிடைப்பதை மட்டுமே சாப்பிட்டுவிட்டு ஆரோக்கியமாக வாழ எல்லோராலும் முடியும்.

நோயாளியாக மாற மட்டுமே அதிக பணமும், அதிக உழைப்பும் தேவைப்படும்.

ஆரோக்கியமாக வாழ்வது என்பது காளை மாட்டில் பால் கறக்கும் வேலைப் போல் சொல்வார்கள், யாரையும் நம்பாதீர்கள். உங்களை, உங்கள் உடலை மட்டும் நம்புங்கள். ஆரோக்கியமக வாழுங்கள்.