எதுவெல்லாம் ஆரோக்கியமான உணவு என்று தெரியவேண்டுமென்றால், ஆரோக்கியமான உணவு என்றால் என்னவென்று முதலில் தெரியவேண்டும்.

எந்த நோயும், எதிர்வினையும், எந்த உடல் – மன பாதிப்பும் தராத உணவு வகைகள் தான் ஆரோக்கியமான உணவு என்று ஏற்றூக்கோள்ளலாமா? என்றால், முடியாது. எந்த எதிர்வினையும் செய்யாவிட்டாலும், உடலுக்கு எந்த நன்மையும் செய்யாத உணவை ஏன் சாப்பிட வேண்டும்?. அவ்வாறென்றால் எவை நல்ல ஆரோக்கியமான உணவு வகைகள்?.

எந்த உணவாக இருந்தாலும், உடலுக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்துக்களையும், சக்தியையும் கொடுக்குமென்றால், அதை சாப்பிடுபவரின் உடல் அவற்றை முறையாக ஜீரனிக்கும்மென்றால், அவை நல்ல உணவுதான். தாராளமாகச் சாப்பிடலாம்.

உணவில் கலக்கப்படும் இரசாயனங்கள்
தொடர்ந்து படிக்கும் முன் சற்று சிந்தனை செய்யுங்கள். இரசாயனங்களும், உயிர் கொள்ளிகளும் கலக்கப்படாத உணவு என்று ஏதாவது மிச்சம் இருக்கிறதா?. சிந்தித்து விட்டுத் தொடர்ந்து படியுங்கள்.

நாம் அருந்தும் நீரிலிருந்து, காய்கறிகள், பழங்கள், இறைச்சி, மீன் வகைகள், அரிசி, பருப்பு தானியங்கள், மசாலா பொருட்கள், சமையல் பொருட்கள், எண்ணை, என அனைத்திலும் கலப்படம், இரசாயன கலவை. இனி எதைச் சாப்பிடுவீர்கள்?.

குழந்தைக்குக் கொடுக்கப்படும் பாலிலிருந்து, முதியவர்களுக்குக் கொடுக்கப்படும் சத்து மாவு வரையில் அனைத்திலும் கலப்படம், இரசாயனம் இனி எதைக் கொடுப்பீர்கள்?. 

உணவில் கலப்படம் இரசாயனம்
உங்கள் உணவை நீங்களே பயிர் செய்தால் ஒழியக் கலப்படத்தையும் இரசாயனத்தையும் தவிர்க்க முடியாது. இன்னும் ஒன்று முக்கியமான விசயம், பயிர் செய்தது நீங்களாக இருந்தாலும், பூச்சிக்கொல்லிகள் இரசாயனங்கள் தெளிக்காவிட்டாலும், நீங்கள் விதைத்த தாவரத்தின் விதையை உருவாக்கியது யார் என்று பார்க்கவேண்டும். விதைகள் மரபணு மாற்றப் பட்டதாக இருக்கலாம்.

Organic Foods ஒர்கானிக் உணவுகள்
ஒர்கானிக் உணவுகள் என்றால் என்ன?. பூச்சிகொல்லி மருந்து மற்றும் இரசாயனம் தெளிக்கப்படாத உணவுகள். சரி, பூச்சிகொல்லியும் இரசாயனமும் நீங்கள் தெளிக்கவில்லை, ஆனால் நீங்கள் பயன்படுத்தும் இயற்கை உரத்தை உருவாக்கப் பயன்படும் ஆடு, மாடு, கோழி, வாத்து, பன்றிகளுக்குக் கொடுக்கப்படும் உணவில் இரசாயனம் கலந்திருந்தால் அந்த இரசாயனம் நீங்கள் பயன்படுத்தும் உரத்திலும் இருக்கும்தானே, உரத்தில் இருக்கும் இரசாயனம் பயிர்களிலும் கலக்கும் தானே?. இனி அது எப்படி ஒர்கானிக் உணவுகள் ஆகும்?.

உணவு உற்பத்தி செய்த பின், அதை  பொட்டலம் போட, கெட்டுப்போகாமல் தடுக்க, அதை பாதுகாக்க சிறிதளவேனும் இரசாயனம் கலக்கப்பட்டும் தானே?.

கடைகளில் கிடைக்கும் பெரும்பாலான ஒர்கானிக் உணவுகள், உண்மையான இயற்கை உணவு வகைகள் அல்ல. இரசாயனமும் பூச்சிக்கொல்லி மருந்துகளும் குறைவானவை, மனிதர்களுக்கு நேரடியான கெடுதல்கள் செய்யாதவை என்று வேண்டுமானால் சொல்லலாம்.

இப்படி அனைத்து வகை உணவிலும் பூச்சிகொல்லி மருந்துகளும் இரசாயனங்களும் கலந்தபின் எதைச் சாப்பிடுவீர்கள். 

அவர் அதில் இரசாயனம் இருக்கும் என்று சொன்னார் இவர் இதில் பூச்சிக்கொல்லிகள் இருக்கும் என்று சொன்னார் என்று நாம் கூறலாம். எல்லாம் சரி, அனைத்திலும் பூச்சிகொல்லியும் இரசாயனமும் இருக்கும் போது, எதை சாப்பிட வேண்டும் என்று சொன்னாரா?.

உலகத்தில் சிறந்த உணவு தேன், தேங்காய், பழங்கள், கருப்பட்டி ஆனால் இன்று இவை அனைத்திலும் கலப்படம், பூச்சிகொல்லி, மெழுகு, சரி இனி எதைச் சாப்பிடுவது?.

சிறந்த உணவு பழக்கம்
எதைச் சாப்பிடுவது என்று ஆராய்ந்து, எதில் எதில் என்ன இரசாயனம் கலக்கப்படுகிறது என்று ஆராய்வதை விட, எப்படிச் சாப்பிடுவது என்று அறிந்துகொள்ளுங்கள். மற்றதை உங்கள் உடல் கவனித்து கொள்ளும்.

ஒரு உதாரணத்திற்குச் சொல்கிறேன். நீங்கள் உங்களுக்குத் தெரியாமலேயே உடலுக்கு ஒவ்வாத ஒரு உணவைச் சாப்பிட்டுவிட்டீர்கள். என்ன நடக்கும்? அது உடலுக்குள்ளேயே இருக்குமா அல்லது உங்கள் உடல் அதை வெளியேற்றிவிடுமா?.

அமிர்தமாகவே இருந்தாலும், உடலுக்கு ஒவ்வாது என்றால் உங்கள் உடல் தானாகவே வெளியேற்றிவிடும்.  அப்பறம் என்ன பயம். உங்கள் உடலுக்குத் தெரியாத விசயமா உங்களுக்குத் தெரிந்துவிட போகிறது?.

உணவு உன்னும் முறை
நீங்கள் எதைச் சாப்பிட்டாலும் அதிலிருந்து எந்தத் தொந்தரவும் உருவாகக் கூடாது என்றால், முதலில் உணவு உன்னும் முறையைக் கற்றுக்கொள்ளுங்கள்.

1. சாப்பிடும் முன் உணவைப் பாருங்கள்
2. சாப்பாட்டின் வாசனை, வர்ணம் ரசியுங்கள்
3. விரலால் பிணைந்து உன்னுங்கள்
4. வாயில் போட்டு, எச்சில் கலந்து, நன்றாக மெல்லுங்கள்
5. மென்று உணவின் ருசி போன பிறகு விழுங்குங்கள்

இவை ஐந்தும் முறையாக செய்தால். உடல் முறையாக ஜீரணித்து, எல்லாக் கழிவுகளையும், இரசாயனங்களையும் முறையே வெளியேற்றும்.