அனைத்து நோய்களையும் குணமாக்கும் வழிமுறை
இந்தக் கட்டுரையை குறிப்பாக நோய் கண்டவர்களுக்கும், மருத்துவம் செய்பவர்களுக்கும் எழுதுகிறேன். பல வருடங்களாக மருத்துவம் செய்தும் நோய் ஏன் குணமாகவில்லை என்று குழம்புவோருக்கு இதில் பதில் உண்டு.

ஆரோக்கியமான வாழ்க்கை வாழ நினைப்பவர்களுக்குப் படித்துப்பாருங்கள். கட்டுரையைத் தொடர்ந்து படிக்கும் முன் ஒன்றை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

எந்த நோயாக இருந்தாலும், என்ன தொந்தரவாக இருந்தாலும், என்ன இயலாமையாக இருந்தாலும், இந்த உலகில் நிச்சயமாக ஒரு தீர்வு இருக்கும். மருந்தோ தீர்வோ இல்லாத நோய்கள் உருவாவதில்லை.

தலை வலி முதல் எயிட்ஸ் வரையில் அனைத்து நோய்களுக்கும் மருத்துவம் உண்டு. மருத்துவம் தெரியாதவனிடமும், மனித உடல் அமைப்பைப் பற்றி தெரியாதவனிடமும் மாட்டிக் கொண்டு, குணமாக்க முடியாத நோய்கள் உண்டு என்று தப்பான எண்ணத்தை வளர்த்துக்கொள்ளாதீர்கள்.

ஒரு நோய் தீரவேண்டும் என்றால் முதலில் அந்த நோயின் தொடக்கம், அதன் மூலகாரணத்தை அறிந்துகொள்ள வேண்டும். நோயின் மூலம் அறியாமல் யாரும் எந்த நோயையும் தீர்க்க முடியாது.

நோய்களை அறிந்து கொள்ளுங்கள்
1. வலியோ தொந்தரவோ இருக்கும் இடத்தில் தான் நோய் இருக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் கிடையாது.

2. தொந்தரவு ஏற்பட்ட உடன் தான் நோய் தோன்றியது என்று அர்த்தம் கிடையது. சிறு வயது முதல் சிறுக சிறுக சேர்த்த கழிவுகளே பின்னாளில் உடலில் தொந்தரவாக வெளிப்படுகிறது.

3. உடலில் சேறும் கழிவுகளே உடல் உறுப்புகளின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது.

4. உடலில் சேறும் கழிவுகளே அனைத்து வலிகள், இயலாமை, தொந்தரவுகள், நோய்களுக்கு மூல காரணம்.

5. உடலில் சேறும் கழிவுகளே அனைத்து உபாதைகளுக்கும் காரணமாக இருப்பதால், அந்தக் கழிவுகளை வெளியேற்றுவதும், புதுக் கழிவுகள் உடலில் சேராமல் தடுப்பதுமே மருத்துவமாக இருக்க வேண்டும்.

6. எப்போதும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ ஆசைப்படுவோர், உடலில் சேர்த்து உள்ள கழிவுகளை முதலில் வெளியேற்ற வேண்டும். மேலும் புது கழிவுகள் உடலில் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

7. நீங்கள் எந்த மருத்துவம் செய்தாலும், ஆங்கில மருத்துவமோ, சித்த மருத்துவமோ, யுனானியோ, ஹோமியோபதியோ, அக்குபஞ்சரோ, எந்த மருத்துவமாக இருந்தாலும்.

அவர்கள் செய்யும் ஒரே மருத்துவம் உடலில் சேர்ந்த கழிவுகளை வெளியேற்றுவதாக மட்டும் தான் இருக்க வேண்டும்.

8. உடலின் நோய்களைக் குணப்படுத்த உடலால் மட்டுமே முடியும், எந்த மனிதனாலும் கண்டிப்பாக முடியாது.

9. மருத்துவர்கள் செய்யும், செய்யவேண்டிய ஒரே வேலை, கழிவுகளை வெளியேற்ற உடலுக்கு உறுதுணை புரிவது மட்டுமே.

10. கழிவுகளை மட்டும் வெளியேற்றினால் போதும் உடல் தன்னை தானே குணப்படுத்திக் கொள்ளும்.

11. கழிவுகள் உடலில் சேர முக்கிய காரணங்கள் இரண்டு. ஒன்று செரிமானம் கோளாறு மற்றொன்று மலச்சிக்கல்.

12. உடலில் கழிவு சேறும் மற்ற காரணங்களை கீழே கொடுக்கப் பட்டிருக்கும் இணைய தளத்தில் படிக்கலாம். http://varmacare.blogspot.com 

நோய்களைக் குணப்படுத்தும் வழிமுறை உதாரணம்:
ஒருவர் மூச்சுவிடச் சிரமப்படுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருடைய இந்தத் தொந்தரவுக்கு ஆங்கில மருத்துவர்கள், பல பெயர்கள் சூட்டுவார்கள், ஆனால் ஆனால் உண்மையில் அவருடைய தொந்தரவு என்ன மூச்சு விடச் சிரமம் அவ்வளவு தான். இதை எப்படிக் குணப்படுத்துவது?.

உண்மையில் இந்த நோயாளியைக் குணப்படுத்துவது மிகச் சுலபம் ஆனால் சில மருத்துவர்கள் அதைச் செய்ய மாட்டார்கள். அந்த நோயாளியை வைத்து பணம் பண்ணுவதற்காக அவரின் நோய் குணமாகாமல் பார்த்துக் கொள்வார்கள், அல்லது அந்த நோயின் தீவிரத்தை அதிகமாக்குவார்கள்.

இந்த நோயாளிக்குக் குணமாக தீர்வு என்ன?. மிகச் சுலபம்
1. நுரையீரலில் சேர்ந்திருக்கும் கழிவுகளை வெளியேற்ற வேண்டும்.

2. புதுக் கழிவுகள் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

3. நுரையீரலுக்குச் சக்தி அளிக்க வேண்டும்.

4. ஒழுங்கான வாழ்க்கை முறையையும், உணவு முறையையும் கற்றுத்தர வேண்டும்.

5. இப்படிச் செய்தால் உடல் அவர் நோய்களைக் குணப்படுத்தும். தொந்தரவுகள் நீங்கி ஆரோக்கியம் பெருகும்.

நோய்களைக் குணப்படுத்துவது எவ்வளவு சுலபம் பார்த்தீர்களா?. எந்த மருத்துவன் இதைச் செய்கிறானோ அவன் மட்டுமே உண்மையான மருத்துவன்.

அதை விடுத்து, இந்த மருந்துகளைச் சாப்பிடும் வறை மூச்சு சுலபமாக விடலாம், இந்த ஸ்ப்ரே அடிக்கும் போது மூச்சு சுலபமாக விடலாம் என்று. மருந்து மாத்திரைகளைச் சாப்பிடுவதை நிறுத்தினால் உங்கள் உயிருக்கு நாங்கள் உத்தரவாதம் இல்லை என்று மிரட்டி மக்கள் பணத்தை பறிக்கும் கொள்ளை கூட்டத்திடம் சிக்காதீர்கள்.

மருத்துவம் செய்யும் முறைகள்
இந்த மருத்துவம் செய்யுங்கள், செய்யாதீர்கள் என்று நான் சொல்லமாட்டேன். உங்கள் உடல், உங்கள் நோய், உங்கள் பணம், உங்கள் இஷ்டம். ஆனால் மருத்துவம் செய்யும் வழிமுறைகளை மட்டும் சொல்லித்தருகிறேன்.

1. உங்களுக்கு வந்திருக்கும் தொந்தரவுகளின் மூலகாரணத்தைக் கேளுங்கள்.

குழந்தைகளுக்குப் பெயர் வைப்பது போல், தொந்தரவுக்குப் பெயர் மட்டுமே வைத்து உங்களை ஏமாற்றப் பார்ப்பார்கள். ஏமாராதீர்கள். 

தெளிவாக விளக்கம் கேளுங்கள், சொல்லவில்லை என்றால் கிளம்பி விடுங்கள், அவன் ஏமாற்றுக்காரன்.

2. உங்கள் தொந்தரவுகளை தவிர்க்கும் வழியைக் கேளுங்கள்.

3. அவர்கள் கொடுக்கும் மருந்து / சிகிச்சை என்ன செய்யும், எப்படி உங்களுக்கு உதவும் என்று கேளுங்கள்.

4. அவர்கள் கொடுக்கும் மருந்தின் / சிகிச்சையின் பக்கவிளைவுகளை பற்றிக் கேளுங்கள்.

5. அனைத்துக்கும் மேலாக அந்த மருத்துவர் எப்படி நடந்து கொள்கிறார், எப்படிப் பேசுகிறார் என்று பாருங்கள். உங்களைப் பயமுறுத்தும், மரண பயம், நோயின் பயம் உருவாக்கும் பாணியில் பேசினால், பேச்சை நிறுத்திவிட்டுக் கிளம்பி விடுங்கள்.

6. நோயாளிகளுக்கு நம்பிக்கையையும், தைரியத்தையும் கொடுப்பவன் மட்டுமே உண்மையான மருத்துவன், பயத்தை உருவாக்குபவன் ஏமாற்றுக்காரன்.

7. அந்த மருத்துவர் தைரியத்தை கொடுத்தால், அவர்கள் கொடுக்கும் மருந்து உடலின் கழிவுகளை வெளியேற்றும் என்றால், உடலுக்குத் தெம்பை கொடுக்கும் என்றால். அவர் கொடுக்கும் மருந்து உடலுக்குத் தீங்கு விளைவிக்காது என்றால், தொடர்ந்து வைத்தியம் செய்யுங்கள்.

இல்லையேல், வேறு நல்ல மருத்துவரை / மருத்துவத்தை நாடுங்கள்.