இன்று பெரும்பாலான ஆண்களும் பெண்களும், ஆண்மையும் பெண்மையும் குறைந்து பல இன்னல்களுக்கு ஆலாகிறார்கள். ஆண்மைக் குறைவு என்றால் உடல் உறவில் இயலாமை, பெண்மை குறைவு என்றால் பிள்ளை பெற்றுத்தர இயலாமை என்று புரிந்துகொள்ளக் கூடாது.

ஆண்மை என்றால் ஒரு ஆணின் ஒட்டு மொத்த உடல் நலன், உடல் திறன் பற்றித்தான் பேச வேண்டும். பெண்மை என்றால் ஒரு பெண்ணுக்குரிய அனைத்து உடல் திறன், கடமைகள்  பற்றித்தான் பேச வேண்டும். ஆண்மையும், பெண்மையும் வெறும் உடலுறவு சம்பந்தமான விசயமாகப் பார்க்கக்கூடாது. இவை ஒரு மனிதனின் ஒட்டு மொத்த உடல், மன ஆரோக்கியம் சம்பந்தப் பட்டவை.

ஆண்மை பெண்மை என்று இரு வேறு துருவமாக நாம் பார்த்தாலும், இவற்றில் குறைபாடு வருவதற்கான காரணங்கள் பெரும்பாலும் சமமாகத்தான் இருக்கின்றன. முதலில் ஆண் பெண் ஆரோக்கியம் என்றால் என்ன என்று பார்ப்போம்.

ஆரோக்கியமான ஆண்
ஆரோக்கியமான ஆண் என்பவன், தன் தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள் என அனைவரையும் அனுசரித்து, அன்பாகக் கருனையாக, பொறுப்பாக நடக்க வேண்டும். தன்னுடைய மனைவியை, தன் காம இச்சைகள் தீர்க்கும் இயந்திரமாகவும், தனக்குப் பிள்ளைகள் பெற்றுத் தரும் இயந்திரமாகவும், தனக்கு வேளைச் செய்யும் வேளைக்காரியாகியும் நினைக்கக் கூடாது. அப்படி எந்த ஆணாவது தன் மனைவியை நடத்துவானே ஆனால், அவன் ஆண்மகனே அல்ல, அது அவனுக்கு கேடுதான்.

ஒரு ஆரோக்கியமான ஆண் உடல் அளவிலும், மனதளவிலும் தெளிவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். அவனுக்கு தன் தினசரி வேளைகளைச் செய்வதில் எந்தச் சிக்கலும் இருக்கக்கூடாது. தன்னுடைய அலுவலக வேலைகளையும், தனது சொந்த வேளைகளைச் செய்யும் போது அவன் எந்தத் தொந்தரவையும், எந்த வலியையும் அனுபவிக்கக் கூடாது. எவன் தன் சொந்த வேளைகளைச் செய்யவே கஷ்டப்படுகிறானோ, அவன் ஆரோக்கியம் அற்றவன்.

ஒரு கூளி தொழிலாளி பத்து மூட்டையைத் தூக்கிவிட்டு, இடுப்பு வலிக்கிறது என்றால் பரவாயில்லை. ஒரு விவசாயி உழைப்புக்குப் பின் உடல் வலி வந்தால் பரவாயில்லை. ஒரு வாகன ஓட்டுநர் பல மணி நேரம் வாகனம் ஓட்டுவதால் அசதி வலி வந்தால் பரவாயில்லை.  ஆனால் வெறும் ஏசி அரையில் வேலை செய்பவன், சும்மா இருப்பவன், சுலபமான வேலை செய்பவன், எந்த உடல் உழைப்புமே இல்லாத சூழ்நிலையில் உடல் உபாதைகளுக்கு ஆலானான் என்றால், தன் அன்றாட கடமைகள் செய்யவே கஷ்டப்படுகிறான் என்றால், அவன் உடல் ஆரோக்கியம் குறைந்தவன்.

ஆரோக்கியமான பெண்
ஆரோக்கியமான பெண் என்பவளும் அப்படிதான் தன் அன்றாட கடமைகளை செய்வதில் எந்தத் தொந்தரவும் எதிர் நோக்கக்கூடாது. ஒரு பெண் என்பவள் தன் கணவன், பிள்ளைகள், பெற்றோர், மாமனார், மாமியார், குடும்பத்தார் என அனைவரையும் அனுசரித்து, அன்பாக, அரவனைப்பாக, பொறுப்பாக நடக்கக்கூடிய அரணாக இருக்க வேண்டும்.

ஒரு ஆரோக்கியமான பெண்ணுக்கு, தன் அன்றாட வேளைகளைச் செய்வதிலும், மாதவிடாய் காலங்களிலும், கற்பகாலங்களிலும், பிள்ளை பிறப்பிலும், எந்தத் தொந்தரவும் இருக்கக்கூடாது, இருக்காது. கணவனை தன் குழந்தையாக எண்ணி அன்பாகப் பழக வேண்டும். அவன் ஆசைகளை நிறைவேற்ற வேண்டும்.

மன ஆரோக்கியம்
ஆணோ பெண்ணோ, மன அமைதி நிம்மதி இல்லாமல் ஏதாவது, பயம், கவலை, துக்கம், எரிச்சல், கர்வம் போன்ற எண்ணங்களால் பீடிக்கப்பட்டிருந்தால் அவருக்கு ஆரோக்கியம் குறைவாக உள்ளது