Author: Raja Mohamed Kassim

சிறுநீரில் கழிவுகள்

சிறுநீர் அழுக்காக இருக்கிறது, அல்லது சிறுநீரில் கழிவுகள், கிருமிகள் இருக்கிறது, அதனால் உங்கள் உடலின் உள்ளேயே கழிவுகள் இருக்கிறது, உங்களுக்கு நோய் இருக்கிறது என்று யாராவது சொன்னால். அவர் உங்களை ஏமாற்றுகிறார் என்று அர்த்தம். ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், சிறுநீர் என்பதே உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும் வழிதான். உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலமாக வெளியேறுவதால், சிறுநீர் அழுக்காக்கத்தான் இருக்கும். அது மட்டுமல்ல சிறுநீரில் கழிவுகள், கிருமிகள் இருந்தால், அந்த கழிவு அல்லது கிருமி உடலைவிட்டு வெளியேறிவிட்டது என்றுதான் பொருள்கொள்ள வேண்டுமே ஒழிய, சிறுநீரில் இருந்தால் உடலின் உள்ளே இருக்கும் என்பது, வியாபாரத்துக்காகக் கூறப்படும் பொய்கள். சிறுநீரில் ஒரு பொருள் வெளியேறி விட்டால், அந்த பொருள் உடலின் உள்ளே இல்லை அல்லது குறைந்த கொண்டிருக்கிறது என்பதை தெளிவாக புரிந்துக் கொள்ளவேண்டும். ஒரு உதாரணத்துக்காக சொல்கிறேன், உணவு உட்கொண்ட ஒருவர் வாந்தி எடுத்து உண்ட உணவு வெளியேறினால், உடலின்...

Read More

திருக்குறள் கூறும் மருத்துவம்

திருக்குறள் தெளிவுரை அதிகாரம்:மருந்து பாடல்கள்:10 இந்த அதிகாரத்தில், மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ வழிமுறைகளையும், மனிதர்களுக்கு நோய்கள் உண்டாகும் காரணத்தையும், அந்த நோய்கள் வராமல் தடுக்கும் வழிமுறைகளையும். நோய்கள் உண்டானால் அவற்றை குணப்படுத்தும் வழிமுறைகளையும் கற்று தருகிறார் திருவள்ளுவர். மருந்து அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறும் இந்த பத்து பாடல்களை புரிந்துகொண்டு வாழ்வில் கடைப்பிடித்தல். வாழ்நாள் முழுவதும் எந்த நோயும் அண்டாமல் வாழலாம். ஒருவேளை தற்போது நோய் கண்டவராக இருந்தால் அனைத்து வகையான நோய்களும் நிச்சயமாக குணமாகும். குறள் 941: மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர், வளிமுதலா எண்ணிய மூன்று. உரை பசியின் அளவுக்கு மிகுதியாக உண்பதும், உடலுக்குத் தேவையான பொழுது ஓய்வும் உறக்கமும் கொடுக்காமல் இருப்பதும். சித்தமருத்துவ நூல்கள் கூறும் வாதம், பித்தம், கபம், இவை மூன்றும் மாறுபாடு அடைந்து உடலில் நோய்கள் உருவாகக் காரணமாக இருக்கிறது. குறள் 942:  மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது, அற்றது போற்றி உணின். உரை...

Read More

ஆரோக்கிய டெஸ்ட்

நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா என்று அடுத்தவரோ அல்லது மருத்துவரோ கூறக் கூடாது. உங்கள் உடல் தான் கூற வேண்டும். உங்கள் உடலின் செயல்பாட்டை வைத்து உங்கள் ஆரோக்கியத்தை அறிந்து கொள்ளுங்கள். 1. பசி – குறைந்தது 2 வேலை உண்மையான பசி இருக்க வேண்டும் 2. ‎பசி இல்லாமல் சாப்பிடும் ஆசை உருவாகக் கூடாது 3. ‎தாகம் – தாகம் அளவாக இருக்க வேண்டும் 4. சோர்வு – காரணம் இல்லாமல் அசதி, சோர்வு இருக்கக் கூடாது 5. ‎தூக்கம் – படுத்த 10 நிமிடத்தில் தூங்க வேண்டும், தூக்கம் நிம்மதியாக இருக்க வேண்டும். தூக்கத்தில் எதற்காகவும் காலை வரை எழுந்திருக்கக் கூடாது 6. ‎தூங்கி எழும் போது மனம் அமைதியாக, உடல் சுறு சிறுப்பாகவும், உச்சாகமாகவும் இருக்க வேண்டும் 7. ‎மன நிம்மதி – மனம் எப்பொழுதும் அமைதியாக இருக்க வேண்டும். பயம், துக்கம், கவலை, எரிச்சல், பொறாமை...

Read More

மனிதனுக்கு நோய்கள் உருவாக 10 முக்கிய காரணங்கள்

பசியின்றி உண்பது. பசிக்கு மீறி அதிகமாகச் சாப்பிடுவது தாகமின்றி தண்ணீர் குடிப்பது. அதிகமாகத் தண்ணீர் குடிப்பது இரவு தூக்கம் இன்மை. இரவு விழித்திருப்பது. தாமதமாக உறங்குவது. மலம், சிறுநீர், போன்ற கழிவு நீக்கம் கோளாறு காய்ச்சல், சளி, இருமல், வாந்தி, வயிற்றுப் போக்கு, போன்ற கழிவு நீக்கங்களைத் தடுப்பது தேவையில்லாமல் பகலில் அதிகம் தூங்குவது அசதியாக இருக்கும் போது உடல் உழைப்பு அன்றாட பயன்பாட்டில் பயன்படுத்தும் இரசாயனங்கள். போராமை, எரிச்சல், கர்வம், திமிர், பேராசை போன்ற தீய குணங்கள் இரசாயன மருந்துகள். சாதாரண உடல் தொந்தரவுக்கு ஆங்கில மருத்துவர்கள் கொடுக்கும், இரசாயன மருந்துகள், மனித உடலில் நிரந்தர மற்றும் கொடிய நோய்களை...

Read More