Author: Raja Mohamed Kassim

திருக்குறள் கூறும் மருத்துவம்: குறள் 942

குறள் 942: மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது, அற்றது போற்றி உணின். உரை இதற்கு முன்வேளையில் உண்ட உணவு முழுதாக செரித்து விட்டதா என்பதை அறிந்து. இப்போது இருக்கும் பசியின் அளவையும் அறிந்து, பசியின் அளவுக்கு தக்க உணவு உண்டால். இந்த உடலைப் பாதுகாக்க எந்த மருந்தும் தேவைப்படாது. குறள் விளக்கம் மனிதனின் அனைத்து நோய்களுக்கும் மூல காரணமாக இருப்பது உடலில் ஏற்படும் சக்தி குறைபாடும், உடலில் சேரும் கழிவுகளும் தான். செரிமானம் முறையாக நடக்காதப்பொழுது உண்ட உணவிலிருந்து உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காது. செரிமானம் முறையாக நடக்காததால் செரிமானத்தின் பின் கழிவுகளும் முழுதாக வெளியேறாது. அதனால்தான் திருவள்ளுவர் கூறுகிறார், முன் வேளையில் உண்ட உணவு செரித்து விட்டதா என்று அறிந்து, பசி உண்டான பின்பு அடுத்த வேளை உணவை உட்கொண்டால் எந்த மருந்தும் தேவைப்படாது என்று, காரணம் பசித்து உண்பவருக்கு உடலில் எந்த உபாதையும் தோன்றாது. திருவள்ளுவர் மருந்தென...

Read More

திருக்குறள் கூறும் மருத்துவம்: குறள் 943

குறள் 943: அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு, பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு. உரை அன்றாட வாழ்க்கைமுறை, செய்யும் தொழில் இவற்றுக்குத் தேவைப்படும் உடலின் சத்தும் ஆற்றலும் அறிந்து. அந்த உடலின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய உணவைத் தேர்ந்தெடுத்து உண்பதே, இந்த உடல் நீண்ட நாட்களுக்கு ஆரோக்கியமாக இருக்க உதவும் வழியாகும். குறள் விளக்கம் நமக்கு முந்தைய தலைமுறைகளுடன் ஒப்பிடும்போது, இன்றைய தலைமுறை மனிதர்களுக்கு பல நோய்கள் உண்டாவதற்குக் காரணம், அவர்கள் உடலுக்கு ஒத்துக்கொள்ளாத உணவை உண்பதுதான். ஒரு மனிதன் தன் உடலுக்குத் தேவையான சத்துக்களையும் அதை தரக்கூடிய உணவுகளையும் அறிந்து, பசியின் அளவுக்கு உண்டல், இந்த உடல் ஆரோக்கியமாகப் பல காலம் வாழ உதவும் என்கிறார் திருவள்ளுவர். தொலைக்காட்சி விளம்பரங்களையும், கடைகளின் அலங்காரத்தையும் பார்த்து ஏமாறாமல், நம் உடலுக்கு போதிய சக்தியை தரக்கூடிய உணவைத் தேர்ந்தெடுத்து...

Read More

திருக்குறள் கூறும் மருத்துவம்: குறள் 944

குறள் 944: அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல, துய்க்க துவரப் பசித்து. உரை ஆசைக்கும் சுவைக்கும் அடிமையாகி அதிகமாக உண்ணாமல். உண்ட உணவு செரித்ததை அறிந்து, நன்றாகப் பசிக்கும்போது உடலுக்கு ஒத்துப்போகும் உணவை உட்கொள்வதை வாழ்க்கை நெறியாக கடைப்பிடிக்க வேண்டும். குறள் விளக்கம் ஆரோக்கியமாக வாழ விரும்புவோர் முன்பு உண்ட உணவு செரிமானமாகி, மீண்டும் பசித்தால், உடலுக்கு ஒத்துக்கொள்ளும் நல்ல ஆரோக்கியமான உணவை மட்டும்தான் உட்கொள்வேன் என்பதை, வாழ்க்கை நெறியாகவே வைத்திருக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். பிடித்த உணவாக இருந்தாலும், சுவையான உணவாக இருந்தாலும் பசி இல்லை என்றால் அதை உண்ண மாட்டேன் என்பதைக் கடைப்பிடித்தால், நோய்கள் உருவாக வாய்ப்பே இல்லை. கடைப்பிடித்தல் என்பதற்கு இறுதிவரையில் பின்பற்றுதல் என்று பொருள்படும். பசித்தால் மட்டும் உண்ணும் பழக்கத்தை சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரையில் அனைவரும் இறுதிவரையில் பின்பற்ற வேண்டும்...

Read More

திருக்குறள் கூறும் மருத்துவம்: குறள் 945

குறள் 945: மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின், ஊறுபாடு இல்லை உயிர்க்கு. உரை வாதம், பித்தம், கபம், இவை மூன்றும் மாறுபாடு அடையாதவாறு, உடலுக்கு ஒத்துப்போகாத உணவை மறுத்து, உடலுக்கு நன்மை பயக்கும் உணவை மட்டும் உட்கொண்டால். இந்த உடலில் வாழும் உயிர் நோயினால் வேதனை அடையாது, துன்பத்தையும் அனுபவிக்காது. குறள் விளக்கம் வாதம், பித்தம், கபம், இவை மூன்றும் மாறுபாடு அடையாமல் இருக்க, உடலுக்கு ஒத்துக்கொள்ளக்கூடிய ஆரோக்கியமான உணவை மட்டும் உண்டு. உடலுக்கு ஒவ்வாத உணவைத் தவிர்த்தால், அந்த உடலில் வாழும் உயிருக்கு எந்த வேதனையும் விளையாது என்கிறார். உடலில் வேதனைகள் உண்டானால் அந்த வேதனையை அனுபவம் செய்வது உயிர்தானே, அதனால் உயிரைக் குறிப்பிடுகிறார். புட்டியில், பைகளில் அடைத்த உணவுகளும், பிஸ்ஸா, பர்கர், பெப்சி, கோக் போன்ற வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, நம் உடலுக்கு ஒத்துப் போகாத உணவை உட்கொள்வதும், இன்றைய மனிதர்களுக்கு பல நோய்கள் உருவாக...

Read More

திருக்குறள் கூறும் மருத்துவம்: குறள் 946

குறள் 946: இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும், கழிபேர் இரையான்கண் நோய். உரை உணவை பசியின் அளவுக்குக் குறைவாக உண்பவனிடத்தில் ஆரோக்கியம் நிலைத்து நிற்பது போல், பசியின் அளவுக்கு மிகுதியாக உண்பவனிடத்தில் நோய்கள் நிலைத்து நிற்கும். குறள் விளக்கம் பசியை அறிந்து, பசி வந்தபின்பு உண்பவன் எந்த நோய்க்கும் ஆளாகாமல், ஆரோக்கிய வாழ்வில் நிலைத்திருப்பான். அதைப்போல் பசியில்லாமல் ஆசைக்கும் இச்சைக்கும் ஆளாகி உண்பவன், அந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்ளும் வரையில் நிரந்தர நோயாளியாகவே இருப்பான், என்கிறார் திருவள்ளுவர். பசியறிந்து பசியின் அளவுக்கு உண்பவனுக்கு எந்த நோயும் அண்டாததால் அவன் என்றுமே ஆரோக்கியமாக இருப்பான். ஆனால் பசியில்லாமல், பசியைவிட அதிகமாக உண்பவன் உடலில் நோய்கள் தோன்ற தொடங்கும். அவன் தன் நோய்களுக்கு என்னதான் வைத்தியம் பார்த்தாலும். அவனது நோய்களின் தன்மைகள் மாறுமே ஒழிய, நிரந்தரமாக உடலை விட்டு நீங்காது. அவன் நிரந்தர நோயாளியாகவே இருக்க...

Read More