Author: Raja Mohamed Kassim

குழந்தைகளின் மன நலன்

நம்முடைய கையடக்க தொலைப்பேசியை எப்படிப் பாதுகாக்கிறோம். நம் வாகனத்தை எப்படிப் பாதுகாக்கிறோம். சீர்கெட்டு பின் சரி செய்வதில்லை ஆனால் எந்தச் சீர்கேடுகளும் ஏற்படாமல் பார்த்து பத்திரமாகப் பாதுகாக்கிறோம். ஒரு உயிர் அற்ற பொருளையே இப்படிப் பொத்தி பாதுகாக்கும் போது, இறைவன் நமக்களித்த அருட்கொடையான, உயிருள்ள ஜீவனான நம் குழந்தைகளை எப்படி பார்த்து பாதுகாத்து வளர்க்க வேண்டும்?. பெற்றோர்கள் ஒன்றைக் கவனமாக தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் குழந்தை உங்களுக்கு அளிக்கப்பட்ட அருட்கொடை மட்டுமே, அந்தக் குழந்தையை நீங்கள் படைக்கவில்லை. உங்களுக்கு அந்தக் குழந்தை மீது எந்த உரிமையும் இல்லை. அது ஒரு தனி உயிர். அந்த உயிர் தழைத்தோங்க நீங்கள் உதவுகிறீர்கள் அவ்வளவு தான். அந்த குழந்தையை அன்பாய் அரவணைத்து, பாதுகாத்து, ஆரோக்கியமாக, இந்த உலகில் வாழக் காற்று கொடுப்பது மட்டுமே உங்கள் மீது கடமையாகும். இப்படி வளர்க்கப்பட்ட குழந்தைகளிடமிருந்து கண் குளிர்ச்சியும், மன அமைதியும், சந்தோசமும் உங்களுக்கு...

Read More

மனம் தான் மனிதன்

மனம் என்பது இறைவன் நமக்களித்த ஒரு அற்புத ஆற்றல். இந்த மனம் எல்லா வல்லமையும் பெற்றது. மனம் நினைத்தால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும். அப்படிப்பட்ட மனதை நாம் எப்படிப் பாதுகாக்க வேண்டும். நம் மனம் மட்டுமல்ல நம் கணவன், மனைவி, தாய், தந்தை, உடன் பிறந்தோர், தாத்தா, பாட்டி, உற்றார், உறவினர், நண்பர்கள், குறிப்பாகக் குழந்தைகள் மனதையும் பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு உண்டு. சிறு வயதில் குழந்தைகள் மனதில் பதியும் பதிவுகளே, அவர்களின் வாழ்க்கையை, எதிர்காலத்தை, மகிழ்ச்சியை , நம்பிக்கையை, ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கிறது. மனம் தான் மனிதன். மனதின் பதிவுகளும், நம்பிக்கைகளுமே ஒரு மனிதனின் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. அந்த மனம் மாசுபடாமல் பாதுகாத்துக்கொள்ளுங்கள். மனித உடலில் எந்தப் பாகம் கெட்டுப்போனாலும், என்ன நோய் தோன்றினாலும், மனம் மட்டும், நம்பிக்கையை இழக்காவிட்டால், அனைத்துத் தொந்தரவுகளில் இருந்தும் மீண்டு, மீண்டும் நல்ல சுகம், ஆரோக்கியம் பெறலாம். இந்து மத இதிகாசங்களில் மனதை...

Read More

நோயறிதல் -இரத்த அழுத்தம்

இரத்தம் எப்படி உருவாக்க வேண்டும்?. உண்ணும் உணவை எப்படிஇரத்தமாக மாற்ற வேண்டும்?. உடலில்எவ்வளவு இரத்தம் இருக்கவேண்டும்?. அது எவ்வாறு இருக்கவேண்டும்?. உங்கள் இதயம் எப்படித் துடிக்க வேண்டும்?. எப்படி இரத்தத்தை உடல் முழுதும் அனுப்பவேண்டும்?. எந்த உறுப்புக்கு எவ்வளவுஇரத்தம் தேவை?. இரத்தத்தில் எவ்வளவுசத்துப்பொருள் கலக்க வேண்டும். இரத்தத்தில் உள்ள அழுக்குகளை எப்படி சிறுநீரகம் சுத்திகரிக்க வேண்டும், சுத்திகரித்த அழுக்குகளை எப்படிஉடலில் இருந்து வெளியேற்ற வேண்டும்?. உடல் கழிவுகள் வெளியேறும் வரை உடலுக்கு எந்தப்பாதகமும் செய்யாமல் எப்படிப் பாதுகாப்பு பண்ணவேண்டும்?. இந்த எல்லா அறிவும்இதற்கு பல மடங்குமேல் அறிவும் இந்தஉடலுக்கு உண்டு. எப்போதுஒன்றும் அறியாத ஆங்கிலமருத்துவர்களை நம்பி உங்கள்உடலையும், மனதையும், நம்பிக்கையையும் ஒப்படைத்தீர்களோ. உங்கள் ஆரோக்கியத்திற்குக் குழிதோண்ட ஆரம்பிக்கப்பட்டது. இரத்தம் அதிகமாக அவசரமாகஅனுப்ப வேண்டிய சூழ்நிலை உடலில் ஏற்பட்டால், இருதயம் வேகமாகத் துடித்து இரத்தத்தை வேகமாகஅனுப்பும் இதில் என்னதவறு இருக்கிறது?. ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், உடல் ஒரு போதும்தவறுகள் செய்யாது....

Read More

உடல் உறுப்புக்கள் கெட்டுப்போனால் சரி செய்யத் தெரியாதா?

இறைவன், இயற்கை என எதை நாம் நம்பினாலும், எதைக் காரணமாக கூறினாலும், நம் அறிவுக்கு எட்டியது நம் பிறப்புக்கு நம் தாய் தந்தை தான் காரணம். நம் உடலில் இருக்கும் ஆத்தனை உறுப்பும் இருதயம் முதல் கை முடி வரையில் அனைத்தையும் படைத்தது, உருவாக்கியது, இயக்குவது, பாதுகாப்பது, கெட்டுப்போனால் சரி செய்வது, இந்த உடல்தான். பிரபஞ்ச பேரறிவு என்று கேள்வி பட்டிருப்பீர்கள். அந்தப் பேரறிவு இந்த உடலுக்கு உண்டு. மனித உடல் மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களுக்கும் இந்தப் பேரறிவு உண்டு. தாயின் கருப்பையில் ஒரு துளி விந்தாக இணைந்த நம்மை, கண், காது, மூக்கு, வாய், உள் உறுப்புகளான இருதயம், சிறுநீர்பை, மண்ணீரல் என் ஒவ்வொன்றாக பார்த்துப் பார்த்து பக்குவமாக உருவாக்கியது யார்? படைத்தது யார்? நம் தாயா? தந்தையா? மருத்துவரா? இல்லை. நம் உடலின் பேரறிவு தான் நம்மை, நம் உடலைக் கருப்பையில் பாதுகாத்து வளர்த்தது. இல்லாத ஒன்றை,...

Read More

குழந்தைகள் நலன்

அதிகமான பிள்ளைகள் இன்று ஆரோக்கியம் இல்லாமலும், உற்சாகம் இல்லாமலும், சோர்வாக இருப்பதற்கும், படிப்பில் கவனம் சிதறுவதற்கும், மனநிலை பாதிப்பதற்கும் ஒரு முக்கியமான காரணம் உண்டு, அதுதான் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட உணவு. தவறான உணவு பழக்கத்தினால் வயிறு பலம் இழந்து. சரியான செரிமானம் இல்லாததால் உண்ட உணவு முழுமையாகச் சக்தியாக மாறாமல் கெட்ட சக்தியாக உடலில் கலக்கிறது, அது பல உபாதைகளையும் நோய்களையும் உருவாக்குகிறது. உங்கள் பிள்ளைகளின் உடல், மன நலத்தைப் பாதுகாக்க, 1. பசி இல்லாமல் உணவு கொடுக்காதீர்கள் 2. சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்காதீர்கள் 3. அசதியாக இருக்கும் போது படிக்க வற்புறுத்தாதீர்கள் 4. இரவில் 9pm -4am கண்டிப்பாகத் தூங்க சொல்லுங்கள், இரவு தூக்கம் மிக முக்கியம். 5. புட்டியில் அடைத்த பானம், உணவு கொடுக்காதீர்கள். 6. அவர்களை உற்சாகமாக வைத்திருங்கள். 7. இரசாயனம் கலந்த உணவு, நீர், மருந்து கொடுக்காதீர்கள். இன்று நீங்கள் கொடுக்கும் உணவும்,...

Read More