Author: Raja Mohamed Kassim

திருக்குறள் கூறும் மருத்துவம்: குறள் 947

குறள் 947: தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின், நோயள வின்றிப் படும். உரை தன் உடலுக்கு எந்த உணவு தேவை, எந்த அளவு தேவை என்பதை அறியாமல். அளவுக்கு அதிகமாக உண்பவனுக்கு அளவில்லா நோய்கள் உண்டாகும். குறள் விளக்கம் நான் எந்த இனத்தைச் சார்ந்தவன்?, என் உடலமைப்பு எப்படிப்பட்டது?, என் உடலமைப்புக்கு ஏற்ற உணவு முறை எது?, என்று அறிந்து உண்பவர் ஆரோக்கியமாக இருப்பார். உடலமைப்புக்கு ஒவ்வாத உணவை உண்பவருக்கும், அளவுக்கு மிகுதியாக உண்பவருக்கும், பல நோய்கள் அண்டும் என்கிறார்...

Read More

திருக்குறள் கூறும் மருத்துவம்: குறள் 948

குறள் 948: நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும், வாய்நாடி வாய்ப்பச் செயல். உரை ஒருவர் உடலில் உள்ள நோயைக் குணப்படுத்த வேண்டுமாயின். அது என்ன நோய் என்பதை அறிந்து. அந்த நோய் உடலில் எங்கு எப்படி உருவானது என்பதை ஆராய்ந்து. அந்த நோயைக் குணப்படுத்தக்கூடிய மருத்துவத்தை அறிந்து. அந்த மருத்துவத்தைப் பிழையில்லாமல் முறையாகச் செய்ய வேண்டும். குறள் விளக்கம் இந்த குறளில் திருவள்ளுவர் நோயாளியிடம் நேரடியாக பேசுகிறார். நோயாளி அவருடைய நோயை குணப்படுத்திக்கொள்ள சில வழிமுறைகளை அறிவுறுத்துகிறார். நோய்க்கண்டவர், தனக்கு என்ன நோய் என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். அந்த நோய் அல்லது உடல் தொந்தரவு உண்டாக காரணமாக இருப்பது எது என்பதை ஆராய்ந்து கண்டுபிடிக்க வேண்டும். அந்த உடல் உபாதையை குணப்படுத்த சரியான மருத்துவம் எது என்றும் கண்டுபிடிக்க வேண்டும். எல்லா மருத்துவத்தாலும் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியாது என்பதால் நோய்க்கு ஏற்ற மருத்துவத்தை நாடவேண்டும் என்கிறார் வள்ளுவர்....

Read More

திருக்குறள் கூறும் மருத்துவம்: குறள் 949

குறள் 949: உற்றான் அளவும் பிணியளவும் காலமும், கற்றான் கருதிச் செயல். உரை மருத்துவம் பயின்றவர்கள் நோயை முறையாகக் குணப்படுத்த. நோய்வாய்ப்பட்டவரின் உடல் நிலை அறிந்து. நோய்வாய்ப்பட்டவரின் நோயின் தன்மை, நோயின் அளவு, நோயின் வீரியம் அறிந்து. அந்த நோயை குணப்படுத்த தகுந்த நேரம் காலம் பார்த்து. முறையாக மருத்துவம் செய்ய வேண்டும். குறள் விளக்கம் இந்தக் குறளை மருத்துவர்களுக்காக திருவள்ளுவர் கூறுகிறார். ஒரு மருத்துவர் தன்னிடம் வரும் நோயாளியை முழுமையாக குணப்படுத்த, சில படிநிலைகளை வழிகாட்டுகிறார். முதலில் நோயாளியின் மனநிலை, உடல் நிலை, வாழ்க்கை முறை அறிந்து. அவருக்கு வந்திருக்கும் நோயை அறிந்து, அந்த நோயின் தன்மை, அந்த நோயாளி அனுபவிக்கும் காலம், அந்த நோயின் வீரியம் போன்றவற்றை முதலில் ஆராயவேண்டும். இவற்றை அறிந்த பின்பு. மருத்துவம் செய்ய தகுந்த சரியான காலம் அறிய வேண்டும். நோயாளியின் உடலின் மருத்துவத்தை ஏற்றுக்கொள்ளும் காலம், நோயாளிக்கு கொடுக்கும் மருந்தின் வீரிய...

Read More

திருக்குறள் கூறும் மருத்துவம்: குறள் 950

குறள் 950: உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று, அப்பால் நாற்கூற்றே மருந்து. உரை நோயாளி, அந்த நோயைத் தீர்க்க கூடிய மருத்துவன், நோயாளியின் நோய்க்குத் தக்க தரமான மருந்து, நோயாளியின் அருகில் இருந்து பரிவுடன் கவனித்துக் கொள்பவர், இவை நான்கும் செறுவதே முறையான மருத்துவமாகும். குறள் விளக்கம் ஒரு நோயாளி முழுமையாக குணமாக நான்கு முக்கியமான விஷயங்கள் ஒன்றுசேர வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். நோயாளி, தன் நோயை அறிந்த, அந்த நோயை முழுமையாக குணப்படுத்த கூடிய மருத்துவரை அணுகி அவரை நோயாளி முழுமையாக நம்பவேண்டும். நோய்கண்டவரின் நோயை அறிந்து அதை முழுமையாகத் தீர்க்க வழி அறிந்த மருத்துவன். அந்த நோயாளியின் நோயைக் குணப்படுத்தக் கூடிய தரமான மருந்து. நோயாளியை பரிவுடன் கவனித்து, அன்பும் நம்பிக்கையும் தரக்கூடிய நபர். இவை நான்கும் சேரும்போது எவ்வளவு கடுமையான நோயாக இருந்தாலும், குணமாகும் என்கிறார் திருவள்ளுவர். இன்று பல நோயாளிகள் நோய்கள் குணமாகாமல் வாழ்நாள்...

Read More

மருந்து அதிகாரத்தின் விளக்கம்

மருந்து என்ற அதிகாரத்தில், திருவள்ளுவர் மருந்தை பற்றி எதுவுமே கூறவில்லையே என்று சிலருக்கு கேள்விகள் தோன்றலாம். திருவள்ளுவர் கூறுவதை பின்பற்றினால் எந்த நோயும் அண்டாது என்பதால், அவர் எந்த மருத்துவமும் கூறவில்லை. ஒருவேளை நோய்கள் தோன்றினால் அதை எப்படி குணப்படுத்த வேண்டும் என்பதை மிக தெளிவாக கூறியுள்ளார். பசியில்லாமல் உண்பதால்தான் அனைத்து நோய்களும் உண்டாகிறது என்றால், கிருமிகளால் உண்டாகும் நோய்கள், தொற்றுநோய்கள் மற்றும் பரம்பரை நோய்களை பற்றி திருவள்ளுவர் ஒன்றுமே கூறவில்லையே என்றும் சிலருக்கு தோன்றலாம். உண்மை என்னவென்றால், தொற்றுநோய் என்று எதைப் பார்த்தும் நாம் பயப்பட தேவையில்லை. இன்றைய விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்களின் கூற்று என்ன?. மனிதனின் உடலில் எதிர்ப்புசக்தி குறையும்போதுதான் மனிதஉடலில் நோய்கள் தோன்றுகின்றது என்பதுதானே?. திருவள்ளுவர் கூறிய வழிமுறைகள், எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும். அதனால் தொற்றுநோய்களும் வராது. ஆங்கில மருத்துவத்தையும் ஆங்கில மருத்துவத்தை தழுவிய மருத்துவங்களையும் தவிர மற்ற எந்த பாரம்பரிய மருத்துவ முறைகளிலும் மனிதனின்...

Read More