எது நோய்? எது நோயல்ல?
எதுவெல்லாம் நோய், எது எதுவெல்லாம் நோயல்ல என்று தெரியாமல் உடலில் என்ன மாற்றும் வந்தாலும், எந்த விஷயம் தொந்தரவாக தெரிந்தாலும், அதை உடனே மருந்து கொடுத்து நிறுத்தனும் அல்லது குறைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த தவறான எண்ணமே பல புதிய நோய்கள் உருவாகவும், இருக்கின்ற தொந்தரவுகள் முற்றி, கொடிய நோயாக மாறவும் காரணமாக இருக்கிறது.

எது நோய்
நம் அன்றாட வேலைகளைச் செய்ய முடியாமல் கட்டிப் போடும் எல்லாமே நோய் என்று பழைய கட்டுரைகளில் பார்த்தோம்.

அது சரி, நோய்கள் ஏன் வருகிறது?
“தீதும் நன்றும் பிறர் தர வாரா”. நம் உடலில் ஒரு நோய் அல்லது ஒரு தொந்தரவு உருவாகிறது என்றால், நாம் செய்த அல்லது செய்து கொண்டிருக்கும் ஏதோ ஒரு தவறான செயலே அதற்குக் காரணமாக இருக்கும். அது  உணவு பழக்கமாக இருக்காலாம், நீர் அருந்தும் முறையாக இருக்காலாம், வாழ்க்கை முறையாக இருக்காலாம். எது காரணமாக இருந்தாலும் அதற்கு நாம் தாம் மூல காரணம்.

சரி, நோய்கள் வந்தால் எப்படி குணப்படுத்துவது?
மிகச் சுலபம், ”எரிகின்ற கொல்லியை உருவினால் கொதிக்கிறது, தானாக அடங்கும்”. நாம் அன்றாட வாழ்வில் என்ன என்ன தவறு செய்கிறோம் என்று கொஞ்சம் சிந்தித்துப் பார்த்து, அந்தத் தவறுகளை மாற்றிக் கொண்டால், தொந்தரவுகள் தானாய் நீங்கும். மிக சுலபம்.

எவையெல்லாம் நோயல்ல
இது மிக முக்கியமான விஷயம். நோயென்றால் என்ன வென்று தெரியாமல் பலர் உடலில் ஏற்படும் எல்லா மாற்றங்களுக்கும் மருந்து சாப்பிட்டு உடலை கெடுத்துக் கொள்கிறார்கள், தங்கள் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கையையும் சீரழிக்கிறார்கள்.

எவையெல்லாம் நோயல்ல என்று ஒரு வரிசையை பார்ப்போம்
1.    தும்மல்
2.    சலி
3.    சலி கட்டி
4.    இருமல்
5.    காய்ச்சல்
6.    தலைவலி
7.    புண்கள்
8.    அரிப்பு
9.    கட்டிகள்

இப்படி இன்னும் பல தொந்தரவுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இப்படி சின்ன சின்னதாக உடலில் வெளிப்படும் தொந்தரவுகளை நோய்கள் என்று நம்பி ஏமாந்து மருந்து மாத்திரைகளைச் சாப்பிடுகிறார்கள். மேலே கூறப்பட்ட எதுவும் நோய்கள் அல்ல, அவை சாதாரண கழிவு நீக்கமே. அவற்றைப் பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.

1.    தும்மல் – நம் உடலுக்கு ஒவ்வாத ஒரு பொருள் சுவாசம் மூலமாக உடலுக்குள் செல்லும் போது, உடல் அதை வெளியேற்ற, உடல் தும்மலை உருவாக்குகிறது. அந்த பொருள் வெளியேறும் வறை தும்மல் தொடரும்.

2.    சலி – அப்படி அந்த தும்மல் மருந்து கொடுத்து நிறுத்தப்பட்டால் அல்லது உடலால் தும்மல் மூலம் வெளியேற்ற முடியாத போது, அந்த கழிவு சலி மூலமாக நுரையீரலிலிருந்து வெளியேற்றப்படும்.

3.    சலி கட்டி – ஒருவேலை தண்ணீர் சலி வெளியேற்ற முடியாத போது. அவை கெட்டி சளியாக மாறும்.

4.    இருமல் – அந்த கெட்டி சளியை வெளியேற்றத் துணையாக உடல் இருமலை உருவாக்கும்

5.    காய்ச்சல் – இது மிக முக்கியம், கெட்டி சளியும் வெளியேற்ற முடியாவிட்டால் அந்த கெட்டி சளியைத் திரவமாக மாற்ற உடலில் காய்ச்சல் தோன்றும். காய்ச்சல் இன்னும் பல நன்மையான காரணங்களுக்காக தோன்றும். அவை, உடலில் நுழைந்த கிருமிகளைக் கொள்ள, உடல் நோய்களை குணப்படுத்த, உடல் உருப்புகள் வளர்ச்சிக்கு, உடலுக்குச் சக்தி கொடுக்க இன்னும் பல நன்மைக்காக.

6.    தலைவலி – பழைய கட்டுரையில் படித்துக்கொள்ளவும்

7.    புண்கள் – உடலில் உள்ள கழிவுகளை தோல் மூலமாக வெளியேற்ற

8.    அரிப்பு – சக்தி தேக்கம், அடைப்பு ஏற்படும் போது அதைச் சரிசெய்ய.

9.    கட்டிகள் – உடலில் தேங்கிய இருக்கும் நாள்பட்ட கழிவுகளை தோய் மூலமாக நேரடியாக உடல் வெளியேற்றுகிறது.

இப்படி உடலுக்கு மிக நன்மைகளை செய்யக் கூடிய விஷயங்களை நோய் என்று நம்பி பல மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு. உடலில் இருந்து வெளியேற வேண்டிய உடல் கழிவுகளை, வெளியேற விடாமல் உடலின் உள்ளேயே தேக்கி வைக்கிறோம். இது உடலுக்குப் பல பாதகங்களையும் பல கொடிய, நாள்பட்ட நோய்களும் உருவாக காரணமாக அமைகிறது.