கோடை வெப்பத்திலிருந்து காத்துக்கொள்ள சில வழிமுறைகள்.

உடல்
மனித உடல் எல்லாப் பருவ காலத்திலும் வாழத் தகுதியாக படைக்கப் பட்டுள்ளன. இந்தியாவை விட வெயில் அதிகம் உள்ள பாலைவன பகுதிகளிலும் மனிதர்கள் வாழ்கிறார்கள். மிகவும் குளிர்ச்சியான பனி பிரதேசத்திலும் மனிதர்கள் வாழ்கிறார்கள்.

உடலுக்கு உஷ்ணத்திலிருந்து தன்னை தற்காக்கும் அறிவு உண்டு.

உணவு
காரமான, புளிப்பான உணவு வகைகளைத் தவிர்க்கவும். மசாலாக்கல், உஷ்ணத்தைக் கூட்டக்கூடிய சமையல் பொருட்களை குறைக்கவும்/தவிர்க்கவும்.

நீர் சத்து அற்ற / பொரித்த உணவு வகைகளைத் தவிர்க்கவும். எ.கா: ரொட்டி, பிச்சா, பெர்கர்.

தாகம் எடுத்தால் வெறும் தண்ணீர் மட்டும் குடிக்கவும். புட்டியில் அடைக்கப்பட்ட, குளிர்ந்த நீர் கூடாது.

நீர் சத்து கொண்ட பழவகைகளை அதிகம் சாப்பிடவும்.