அதிகமான பிள்ளைகள் இன்று ஆரோக்கியம் இல்லாமலும், உற்சாகம் இல்லாமலும், சோர்வாக இருப்பதற்கும், படிப்பில் கவனம் சிதறுவதற்கும், மனநிலை பாதிப்பதற்கும் ஒரு முக்கியமான காரணம் உண்டு, அதுதான் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட உணவு.

தவறான உணவு பழக்கத்தினால் வயிறு பலம் இழந்து. சரியான செரிமானம் இல்லாததால் உண்ட உணவு முழுமையாகச் சக்தியாக மாறாமல் கெட்ட சக்தியாக உடலில் கலக்கிறது, அது பல உபாதைகளையும் நோய்களையும் உருவாக்குகிறது.

உங்கள் பிள்ளைகளின் உடல், மன நலத்தைப் பாதுகாக்க,

1. பசி இல்லாமல் உணவு கொடுக்காதீர்கள்

2. சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்காதீர்கள்

3. அசதியாக இருக்கும் போது படிக்க வற்புறுத்தாதீர்கள்

4. இரவில் 9pm -4am கண்டிப்பாகத் தூங்க சொல்லுங்கள், இரவு தூக்கம் மிக முக்கியம்.

5. புட்டியில் அடைத்த பானம், உணவு கொடுக்காதீர்கள்.

6. அவர்களை உற்சாகமாக வைத்திருங்கள்.

7. இரசாயனம் கலந்த உணவு, நீர், மருந்து கொடுக்காதீர்கள்.

இன்று நீங்கள் கொடுக்கும் உணவும், ஓய்வும் தான் உங்கள் பிள்ளைகளின் எதிர்கால ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கிறது. மறந்துவிடாதீர்கள்.