அதிகாரம்: மருந்து
பாடல்கள்: 10
விளக்க உரை: ஹீலர் ராஜா முகமது காசிம்

மருந்து அதிகாரத்தில், மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ சில வழிமுறைகளையும், மனிதர்களுக்கு நோய்கள் உண்டாகும் காரணத்தையும், அந்த நோய்கள் வராமல் தடுக்கும் வழிமுறைகளையும். ஒருவேளை நோய்கள் உண்டானால் அவற்றை குணப்படுத்தும் வழிமுறைகளையும் கற்றுத்தருகிறார் திருவள்ளுவர்.

மருந்து அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறும் இந்த பத்து பாடல்களை புரிந்துகொண்டு வாழ்வில் கடைப்பிடித்தல். வாழ்நாள் முழுமைக்கும் எந்த நோயும் அண்டாமல் வாழலாம். ஒருவேளை தற்போது நோய் கண்டவராக இருந்தால் அனைத்து வகையான நோய்களும் நிச்சயமாக குணமாகும்.

2000 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் எழுதிய மருந்து அதிகாரத்தின் குறள்களுக்கு, இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப விளக்க உரை எழுத முயற்சி செய்கிறேன்.

அன்புடன்
ஹீலர் ராஜா முகமது காசிம்

 

குறள் 941:
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர், வளிமுதலா எண்ணிய மூன்று.

உரை
பசியின் அளவுக்கு மிகுதியாக உண்பதும், உடலுக்குத் தேவையான பொழுது ஓய்வும் உறக்கமும் கொடுக்காமல் இருப்பதும் சித்தமருத்துவ நூல்கள் கூறும் வாதம், பித்தம், கபம், இவை மூன்றும் மாறுபாடு அடைந்து உடலில் நோய்கள் உருவாக காரணமாக இருக்கிறது.

குறள் விளக்கம்
வள்ளுவர் காலத்தில் சித்தமருத்துவம் பெரும்பான்மையாக பயன்படுத்தப்பட்டதால் திருவள்ளுவர், சித்தமருத்துவத்தை மேற்கோள் காட்டுகிறார். மருத்துவர்கள் தவறுசெய்ய கூடும் என்பதால் சித்தமருத்துவர்கள் என்று உவமை சொல்லாமல், முறையாக வகுக்கப்பட்ட சித்தமருத்துவ நூல்களை உவமையாக காட்டுகிறார்.
பசிக்கு மிகுதியாக உண்பது செரிமான மண்டலத்தைச் சீர்கெடுக்கும். செரிமான மண்டலம் சீர்கேடு அடையும் போது, உண்ட உணவு வயிற்றில் அதிக நேரம் தேங்கி கிடக்கும். வெளியில் பல நாட்கள் கிடந்த உணவு எப்படி அழுகி போகுமோ, அதைப்போல் செரிமானமாகாத உணவு வயிற்றுக்குள் கெட்டுப்போக தொடங்கும். உணவாக நாம் உட்கொண்டது கழிவாக மாறுகிறது, மற்றும்.

உடலில் சக்தி தட்டுப்பாடு அடையும்போது உடலில் சோர்வு உண்டாகும். உடலில் சோர்வோ அசதியோ ஏற்படும்போது உடலுக்கு ஓய்வு கொடுக்காமல், அதை அலட்சியம் செய்தாலும். உடலுக்கு இரவில் போதிய தூக்கம் கொடுக்காமல் இருந்தாலும். உடல் பலகீனமாகி உடலின் செயல்திறன் குறையும்.

உடலின் செரிமானதிறனும், செயல்திறனும் குறையும்போது, உடலில் சேரும் கழிவுகள் வெளியேற முடியாமல், கழிவுகள் உடலின் உள்ளேயே தேங்க தொடங்கும். அதனால் சித்த மருத்துவ நூல்கள் கூறுவது போல் வாதம், பித்தம், கபம், இவை மூன்றும் மாறுபாடு அடைந்து உடலில் நோய்கள் உருவாக்கும் என்கிறார்.