மருத்துவக் கட்டுரை – உடலை அறிவோம்

மனித உடலின் சிறப்பு நிபுணர்கள் 
1. இருதய நிபுணர்
2. கிட்னி நிபுணர்
3. கண் நிபுணர்
4. எழும்பு நிபுணர்
5. E.N.T நிபுணர்
6. மனநல நிபுணர்
7. அலர்ஜி நிபுணர்
8. நரம்பியல் நிபுணர்
9. முத்துக்குத்தண்டு நிபுணர்
10. தலைமுடி நிபுணர்

இப்படி ஒவ்வொரு மனித உடல் உறுப்புக்கு ஒரு தனி நிபுணர்கள் இருக்கிறார்கள், ஆங்கில மருத்துவத்தில். இப்படி தன்னை நிபுணர் என்று சொல்லிக் கொள்ளும் பலரை நாம் பார்த்திருப்போம். இப்படி உடலின் ஒவ்வொரு உறுப்புக்கு, தனித் தனி நிபுணர்கள் இருப்பது நல்லது தானே என்று கூட உங்களுக்குத் தோன்றலாம், ஆனால்…

1. இது சரியான வழிமுறையா?
2. மனித உடல் உறுப்புகளுக்கு தனித் தனியே மருத்துவம் செய்ய முடியுமா?
3. இது மனித ஆரோக்கியத்தைக் காக்க எந்த வகையிலாவது உதவுமா?
என்று பார்ப்போம்.

ஒவ்வொரு உருப்புக்கும் தனி தனி நிபுணர்கள் தேவையா என்று தெரிய வேண்டுமானால், முதலில் உடல் என்றால் என்ன, அந்த உடல் எப்படி செயல் படுகிறது என்று தெரிய வேண்டும், புரியவேண்டும். தெரிந்து கொள்ளுதல் வேறு புரிந்து கொள்ளுதல் வேறு. யார் வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளலாம் ஆனால் புரிந்துகொள்வதுதான் முக்கியம்.

முந்தைய கட்டுரையில் எந்த நோயும் அது தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் உறுப்பில்தான் இருக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை, எந்த நோயும் வலிக்கும் இடத்தில் தான் இருக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை என்று பார்த்தோம். அப்படி இருக்கையில், உண்மையான நோய்க் கண்ட உறுப்பைக் கண்டுபிடிக்காமல், தொந்தரவு தோன்றும் இடத்தையே நோண்டிக் கொண்டிருந்தால் எப்படி நோய் குணமாகும்?.

உதாரணத்துக்கு, நீரிழிவு நோயை எடுத்துக் கொள்வோம். நீரிழிவு நோய் ஏன் உருவானது என்று கேட்டால், டாக்டர்கள் பல காரணங்கள் சொல்வார்கள். பெற்றோரிடம் இருந்து வந்து, பன்கிரியாஸ் வேளைச் செய்யவில்லை, மன அழுத்தம், சோறு சாப்பிடுவது, இந்திய மரபணுவில் இந்த நோய் உண்டு இப்படிப் பல பொய்கள் சொல்வார்கள் விளங்காதவர்கள், இதற்கான உண்மை காரணம் அறியாதவர்கள். பல சித்த மருத்துவர்களும் இவற்றைத் தான் நோய் உருவானதுக்கான காரணமாகக் கூறி வைத்தியம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

சரி, நீரிழிவு நோய்க்கான உண்மைக் காரணத்தை கண்டறிவோமா?. நீரிழிவு நோய் உருவாக ஒன்றும் பெரிய காரணம் எல்லம் கிடையாது, வெறும் சாதாரண செரிமான கோளாறு மட்டுமே, இந்த சாதாரண காரணம் அறியாமல்தான் பல ஆயிரம், பல லட்சம் பறித்துக் கொண்டு, நீரிழிவு நோயாளிகளை, குணப்படுத்த முடியாமல் கடைசிவரை நோயாளிகளாகவே வைத்திருக்கிறார்கள், அவர்களின் தொந்தரவுகளை மேலும் அதிகமாக்குகிறார்கள், ஆங்கில மருத்துவர்கள்.

ஒன்றைத் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், எந்த ஒரு மருத்துவனுக்கு, அவன் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும், ஆங்கில மருத்துவனோ, சித்த மருத்துவனே, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, இயற்கை, அக்குபங்சர் என எவனாக இருந்தாலும் நோயின் உண்மையான மூல காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அவன் மருத்துவனே அல்ல, அவன் வேரும் ஏமாற்றுக்காரன். அவனால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது.

எவன் நோய்க் கண்ட உறுப்பை வெட்டி எடுத்துவிடுங்கள்  என்று சொல்கிறானோ, எவன் ஒருவன் நோய்க்கு ஆயுள் முழுவதும் மருந்து சாப்பிட வெண்டும் என்று கூறுகிறானோ, எவன் நோயைக் குணப்படுத்த முடியாது என்கிறானோ, எவன் நோயோடு வாழக் கற்றுக்கொள்ளுங்கள் என்கின்றானோ, அவனுக்கு மனித உடலைப் பற்றியும், மருத்துவத்தைப் பற்றியும் எந்த உன்மையும் தெரியவில்லை. அவனை நம்பாதீர்கள், அவனை நம்புவோருக்கு கேடுதான்.

மனித உடல் அமைப்பு
மனித உடல் ஒரு ஒட்டுமொத்த கூட்டமைப்பாகவே இயற்கையால் படைக்கப்பட்டிருக்கிறது. மனித உடலில் எந்த ஒரு உருப்பும் தனி தனியாக இயங்காது. அனைத்து உருப்புகளும் ஒன்றுக் கொன்று தொடர்புடையவை. பல உருப்புகள் இணைந்தே ஒரு வேளையைச் செய்கிறது. எந்த உருப்பும் தனியாக ஒரு வேலையைச் செய்வதில்லை.

உதாரணத்துக்கு: செரிமானம்
ஆங்கில மருத்துவம் கூறும் செரிமானம் வயிற்றில் நடக்கிறது என்று, உணவு செரிமானத்துக்கு நான்கு மணி நேரம் தேவை என்று இது உண்மையா? அவ்வளவுதான் அவர்களின் உடலைப் பற்றிய அறிவு. உண்மையில் உணவு செரிமானம் எப்படி நடக்கிறது என்று பார்ப்போம்.

கண்ணில் ஆரம்பிக்கிறது செரிமானம். நாம் உணவைப் பார்க்கும் போது, உணவின் வாசனையை நுகரும் போது, கைகளால் உணவைப் பிசையும் போது, நாம் உண்ணவிருக்கும் உணவை செரிக்கத் தேவையான இரசாயனங்கள் வயிற்றில் சுரக்க ஆரம்பிக்கின்றன.

வாயில் எச்சில் கலந்து நன்றாக மென்று விழுங்கும் போது முதல் கட்ட செரிமானம் வாயில் நடக்கிறது. இப்படியே எச்சில், பல், வயிறு, மண்ணீரல்,கல்லீரல், சிறுகுடல், நுரையீரல், இருதயம், இரத்தம் எனப் பல உருப்புகள் சேர்த்தே, நான் சாப்பிட்ட உணவைச் சக்தியாக மாற்றி உடலில் கலக்கிறது. இது புரியாமல், செரிமான கோளாற்றுக்கு வயிற்றுக்கு மட்டும் மருத்துவம் செய்தால் எப்படிக் குணமாகும்?.

நோயும் காரணமும்
1. கண் நோய்க்கு, கண் கட்டி, பூ விழுதல், பார்வைக் கோளாற்றுக்கு, கண் காரணம் இல்லை.
2. சலி, மூக்கடைப்பு, சைனெஸ், மூச்சுத் திணறல்,இழைப்புக்கு மூக்கு காரணம் இல்லை.
3. காது வலி, அடைப்பு, கட்டி, கேட்கும் திறன் குறைவுக்குக் காது காரணம் இல்லை.
4. வாந்தி, வாய் துர்நாற்றம், வாய், நாக்கு, உதடு புண்ணுக்கு காரணம் வாயோ, நாக்கோ அல்ல.
5. தோல் நோய், முகப்பரு, புண், வெண் குஷ்டம், அலர்ஜி, அரிப்புக்கு, முடி கொட்டுதல், பொடுகுக்குக் காரணம் தோல் அல்ல.

இப்படி மனித உடல் அமைப்பை அறியாமல், உடல் என்பது கூட்டு அமைப்பு, ஒவ்வொரு உறுப்பும் அடுத்த உறுப்பைச் சார்ந்தே செயல் படுகிறது என்று அறியாமல். நோயின் உண்மை தன்மை அறியாமல், நோயின் மூல காரணம் அறியாமல், ஒரு குறிப்பிட்ட உறுப்பின் நிபுணர்கள் என்று யாரையும் நம்பி ஏமாராதீர்கள்.

உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள். மனித உடல் ஒரு கூட்டமைப்பு, எல்ல உருப்புகளும் சேர்ந்து ஒன்றை ஒன்று சார்ந்தே செயல் படுகின்றன, இந்த உருப்புக்கும் தனிப்பட்ட நோய்கள் என்று வருவதில்லை, ஒரு உறுப்பின் கோளாறே அடுத்த உறுப்பின் கோடுகளை உருவாக்குகிறது.
அதனால் ஒரு நோயின் காரணம் தெரியவேண்டும் என்றால்,

நாடிப்பரிசோதணை செய்து, அதற்குறிய பஞ்சபூத மூலகம் அரிந்து, நோயின் தன்மை அரிந்து, பாதிக்கப்பட்ட மூலகம், பாதிக்கப்பட்ட உருப்பு அரிந்து. அந்த உருப்பு பாதிக்க காரணம் அரிந்தால் மட்டுமே, நோயைக் குணப்படுத்த முடியும்.

குறள் 949: 
உற்றான் அளவும் பிணியளவும் காலமும் 
கற்றான் கருதிச் செயல்.

பொருள்: நோயாளியின் வயது, நோயின் தன்மை, மருத்துவம் செய்வதற்குரிய நேரம் என்பனவற்றை எல்லாம் மருத்துவம் கற்றவர் எண்ணிப் பார்த்தே செயல்பட வேண்டும்.