மருத்துவ ஞானம் என்பது, நோய்களைப் பற்றி அறிந்து கொள்வதோ. எப்படி மருந்துகளைப் பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்வதோ. எந்த மருந்து எந்த நோய்க்குத் தீர்வாகும் என்று அறிந்து கொள்வதோ அல்ல.

எந்த மருந்தும் தேவைப்படாத வாழ்க்கையை எப்படி வாழ்வது என்று அறிந்து கொள்வதே உண்மையான மருத்துவ ஞானம் ஆகும். இது மிகச் சுலபமான காரியமும் கூட.

உண்மையைச் சொன்னால் உலகிலேயே மிகவும் முக்கியமான விசயம் இதுதான். கோடிக்கணக்கான மயில் தூரத்தில் இருக்கும் கிரகத்தை அறிந்த மனிதனுக்கு, பிறந்ததில் இருந்தே கூட இருக்கும் உடலைப்பற்றித் தெரியாது, தெரிந்துகொள்ளும் ஆர்வமும் கிடையாது. இது ஒரு வேடிக்கையான விசயம்.

இதுதான் இன்றைய மனிதர்களின் நோய்களுக்கும், துன்பங்களுக்கும் மூல காரணம். மனிதன் ஒரு வேடிக்கையான உயிரினம். மனிதன் தன் வாழ்க்கையில் அடைய நினைப்பது ஏதுவாக இருந்தாலும். பணமோ, பொருளோ, ஞானமோ, முக்தியோ, மண்ணோ, பெண்ணோ, அமைதியோ, மகிழ்ச்சியோ, ஏதுவாக இருந்தாலும் அதை அடைய அவனுக்கு இருக்கும் ஒரே ஆயுதம் இந்த உடல்தான்.

ஆனால் அந்த மிக முக்கியமான உடலைப் பற்றிய ஞானம் அவனிடம்மில்லை. இதைத் தான் திருமூலர் மிக அழகாக ஒரு பாடலில் சொல்கிறார்.

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே. 

எது அறிவு
இன்று உலகில் ஏறத்தாழ 30,000 நோய்வகைகள் உள்ளன. இந்த 30,000 நோய்களை அறிந்து, அதற்குக் காரணம் அறிந்து, அந்த 30,000 நோய்களுக்கு மருத்துவம் அறிந்துகொள்வது மருத்து ஞானமா? அல்லது

1. உடலின் செயல்பாடு
2. உடல் சக்தியின் செயல்பாடு
3. மனதின் செயல்பாடு

இந்த மூன்றைப் பற்றி அறிந்து கொள்வது மருத்துவ ஞானமா? நீங்களே முடிவு செய்யுங்கள்.

மனிதன் ஆரோக்கியமாக வாழ 2 வாய்ப்புகள் மட்டுமே உள்ளன.

1. உலகத்தில் உள்ள அனைத்து நோய்களையும் குறித்து  அதற்கு காரணம் அறிந்து, அதற்கு மருத்துவம் அறிந்து கொள்வது.

2. நம் உடல், மனம் எப்படி செயல்படுகிறது, அதை எப்படி நோயில்லாமல் காத்துக்கொள்வது என்று அறிந்துகொள்வது.

எது உங்களுக்குச் சுலபமோ அதை தேர்ந்தெடுங்கள்.

நோயைப் பற்றிய அறிவு உங்களுக்குப் பயத்தை மட்டுமே ஏற்படுத்தும், அதனால் எந்த லாபமும் கிடையாது.

1. உங்கள் உடல்
2. உங்கள் மனம்
3. உங்கள் சக்தி

இதைப்பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான, ஆனந்தமான, அமைதியான வாழ்க்கையை வாழுங்கள்.