நோயும் மரணமும்
நோய்கள் வேறு, மரணம் வேறு.
மரணம் என்பது அனைவருக்கும் வந்தே தீரும். மரணம் வருவதற்கான எந்த வயது கட்டுப்பாடும் கிடையாது, யாருக்கும் எப்போதும் வேண்டுமானாலும் வரலாம்.

நோய்கள் வந்து, நோயின் காரணமாக இருப்பவர்கள் மிகக் குறைவு. நோய் வந்ததும், நோயைக் கண்டு, பயத்தால் இரப்பவர்கள் தான் அதிகம். நோய்வாய்பட்ட எல்லோரும் இறப்பதில்லை.

நாம் இதை நாம் கொஞ்சம் வேறு மாதிரி பார்ப்போம். நோய்வாய்பட்டு இரப்பவரை. இரப்பதற்கு சில காலம் முன்பு நோய்வாய்ப் பட்டார் என்று கூறலாம். காரணம் இது தான் உண்மை. மரணம் வேறு நோய்கள் வேறு. இவை இரண்டையும் கூட்டு சேர்த்து பயமுறுத்தி பணம் பறிக்கிறார்கள் சில மருத்துவர்கள். எல்லா மருத்துவத்திலும் இது போன்ற மருத்துவர்கள் உள்ளனர்.

ஒருவருக்கு ஏதாவது நோய் வந்தால் அதை குணமாக்குவது மருத்துவரின் வேலை. நோய் குணமாக வேண்டும் என்றால் முதலில் நோயாளிகளுக்கு தைரியத்தை கொடுக்க வேண்டும் அடுத்ததாக நோய் குணமாகும் என்ற நம்பிக்கை கொடுக்கவேண்டும், கடைசியாகத்தான் சிகிச்சை எல்லாம்.

மன தைரியமும் நோய் குணமாகும் என்ற நம்பிக்கையும் மட்டும் இருந்தாலே எல்லா நோய்களும் பறந்து போகும். மருந்து மாத்திரைகள் ஏதும் தேவையில்லை. இதை விடுத்து மருத்துவர்கள் நோயாளிகள் சாவுக்கு நாள் குறிக்க கூடாது.

எல்லா மருத்துவர்களிடமும் ஒன்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கு நோயின் தன்மை விளங்கவில்லை என்றாலோ, உங்களுக்கு ஒரு நோயைக் குணப்படுத்த தெரியவில்லை என்றாலோ. ஒரு நோய் குணமாகாது என்று நீங்கள் நினைத்தாலோ. அதை நோயாளிகளிடம் சொல்லாதீர்கள்.

இந்த உலகில் குணமாக்க முடியாத நோய்களே இல்லை. உங்களுக்கு முடியாமல் போனாலும் அடுத்தவர் குணப்படுத்துவார். ஆனால் நோயாளிகள் மட்டும் மன தைரியத்தை இழந்து விட்டால் யாராலும் காப்பாற்ற முடியாது. அதனால் எந்த நோயும் குணமாகாது என்றும், இறந்து விடுவீர்கள் என்றும் நோயாளிகளிடம் கூறாதீர்கள்.

என் மருத்துவரே குணமாகாது என்று சொல்லிவிட்டார் என்ற விரக்தி ஒன்று போதும் மனிதனைக் கொல்ல. அதைப் போல் நோயாளிகள் ஒன்றைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். மருத்துவர்கள் ஒன்றும் கடவுள்கள் அல்ல. அவர்களால் முடியாவிட்டாலும் அந்த நோய்களைக் குணப்படுத்துவதற்கு யாராவது இருப்பார்கள் தேடிப்பாருங்கள். எந்தச் சூழ்நிலையிலும் நம்பிக்கையை மட்டும் இழந்து விடாதீர்கள்.

நிச்சயமாக எல்லா நோய்களும் குணமாகும்.