18/07/2017 அன்று நான் மதுரைக்கும் திருச்சிக்கும் சென்றேன். அங்கு நான் பார்த்த சில மனிதர்களைப் பற்றித்தான் இதில் பேச போகிறேன்.


நான் பார்த்த வெளி நோயாளிகள்
மதுரையில் ஒரு பிரபலமான மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கு நான் பார்த்த நோயாளிகளில் பெரும்பாலானோர், தவறான வாழ்க்கை முறையால் உருவான நோய்களால் அங்கு வந்திருந்தனர். உன்மையில் அவர்கள் நோயாளிகள் அல்ல ஆனால் தன்னைதானே நோயாளிகள் என்று நம்புபவர்கள்.

அந்த மருத்துவமனையில் நான் பார்த்த வெளி நோயாளிகளின் தொந்தரவுகளுக்கு மிக முக்கிய காரணங்கள் என்று சொன்னால்.

1. குடிப் பழக்கம்
2. தூக்கம் இன்மை / தாமதமாகத் தூங்குவது
3. அதிகமாக உண்பது
4. பசி இன்றி உண்பது
5. மனம் நிம்மதி அற்று இருப்பது
6. இரசாயன மாத்திரைகள்

மிகச் சுலபமாக மாற்றிக்கொள்ளக் கூடிய இந்த ஆறு விசயங்கள்தான் அங்கு இருந்த 80% மக்களின் தொந்தரவுகளுக்கு காரணம். இந்த ஐந்து பழக்கங்களை மாற்றிக் கொண்டால் எல்ல தொந்தரவுகளும் நீங்கிவிடும். அதை விடுத்து இலட்சக் கணக்கில் பணம் செலவழித்து உடலின் சிறிய தொந்தரவுகளைப் பெரிய நோய்களாக மாற்றிக் கொள்கிறார்கள்.

குறள் 942: 
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது, அற்றது போற்றி உணின்.

திருவள்ளுவர் மிக அழகாகச் சொல்லி சென்றுள்ளார். பசித்து மட்டும் உண்டால் எந்த மருந்தும் தேவையில்லை என்று. இதைப் புரிந்து பின்பற்றினாலே எல்லா நோயும் பரந்து போகும்.

நான் பார்த்த குழந்தை நோயாளிகள்
குழந்தைகளுக்கான பிரிவில் உள்ள குழந்தைகள் பெரும்பாலானோர் தாயின் கருவறையில் இருந்து வெளிவரும் போதே நோயுடன், அல்லது உடல் குறையுடன் வந்தவர்கள்.

இந்தக் குழந்தைகள் நோயாளிகளாகப் பிறப்பதற்கு உடல் ஊனத்துடன் பிறப்பதற்கு அந்தத் தாய் உட்கொண்ட இரசாயன மருந்துகள் தான் மிக முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த உண்மையை மறைப்பதற்கு, சொந்தத்தில் திருமணம், சத்து போதவில்லை என்று ஏதாவது பொய்யை சொல்வார்கள்.

மருத்துவர் சொல்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக கண்ட விட்டமின், கல்சியம், சத்து மாத்திரைகளைத் தின்று, ஊசிகளைப் போட்டு. பல தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு கெடுதல் செய்கிறார்கள். 

ஆங்கில மருத்துவத்தின் பணம் பண்ணும் ஆசைக்கு இந்தத் தாய்மார்கள் பலியாகிறார்கள். தாய்மார்களே தயவு செய்து கொஞ்சம் சிந்தித்து செயல் படுங்கள். மருத்துவன் என்றாலும் அவனும் ஒரு வியாபாரிதான், நீங்களும் உங்கள் குழந்தைகளும் நோயாளிகளாக இருக்கும் வறைதான் அவனுக்கு வியாபாரம், வருமானம் எல்லம்.

நான் பார்த்த பெண்கள்
திருச்சியில் சாரதாஸ் துணிக்கடை வாசலில் நின்று கொண்டு அங்குச் சாலையில் நடக்கும் மனிதர்களைக் கவணிக்க ஆரம்பித்தேன்.

முன்பெல்லாம் அந்தப் பெண்ணிடம் கேட்டு அல்லது தாலி, மெட்டி இருக்கிறதா என்று பார்த்துத்தான் ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆகி விட்டதா என்று தெரிந்து கொள்ள வேண்டும். அந்தச் சிரமம் நமக்கு வேண்டாம் என்று ஆங்கில மருத்துவர்கள், பிள்ளை பெற்ற பெண்கள் அனைவரையும் டன்கர் லாரிகள் போல் மாற்றி விட்டார்கள். பார்த்தாலே தெரிந்து விடுகிறது.


கிராமப்புற பெண்களும், ஏழைப் பெண்களும், ஆங்கில மருத்துவம் செய்யாத பெண்களும், நம் தாயும், பாட்டியும் 10 பிள்ளைகள் பெற்றும் ஒள்ளியாக, உடல் கச்சிதமாக வைத்திருக்கும் போது. 

நமக்கு மட்டும் ஏன் உடல் பெருக்கிறது என்று சிந்திக்காமல். பிள்ளை பெற்றாலே உடல் பெருத்துவிடும், இடுப்பு, பிட்டம் எல்லாம் பெருத்துவிடும் என்று தவறாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள் இன்றைய நவீன பெண்கள்.

ஏழைப் பெண்கள் எல்லம் ஆரோக்கியமாக, சுயமாகப் பிள்ளை பெரும் பொழுது, நடுத்தர வற்கத்தின் பெண்களும், பணக்கார பெண்களும் மட்டும் அறுவைசிகிச்சை செய்து பிள்ளை பெற்பது ஏன்?. பிள்ளை பெற்ற பின்பு உடல் பெருப்பது ஏன்?. பிள்ளை பெற்ற பின்பு, பால் சுரக்காமல் இருப்பது ஏன்?. அந்தத் தாய்க்கு பல வகையான ஆரோக்கிய சீர்கேடுகள் வருவது ஏன்?. என்று சிந்திப்பதில்லை

பிறந்த குழந்தைக்கும், பிள்ளை பெற்ற தாய்மார்களுக்கு வரும் அனைத்து ஆரோக்கிய தொந்தரவுகளுக்கும் ஒரே மூல காரணம் அவர்கள் சாப்பிடும் சத்து மாத்திரைகளும், அவர்கள் கற்பமான பிறகு போடு ஊசிகளும் தான்.

தயவு செய்து இரசாயனம் கலந்த மருந்து, ஊசிகள் பயன் படுத்தாதீர்கள். ஸ்கேன், எடுக்காதீர்கள். முடிந்தால் கற்பம் தரித்த பின்பு ஆங்கில மருத்துவர்கள் மூஞ்சிலேயே விழிக்காதீர்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.

நான் பார்த்த முதியவர்கள்
அங்கு நான் பார்த்த முதியவர்கள் பலர் எலும்பு சமந்தமான நோய்களாலும், உடல் பலம் இல்லாமலும் காணப்பட்டார்கள்.

இதற்குக் காரணம் அவர்களின் செரிமான கோளாறும் மலச்சிக்கலும்தான். உணவைக் குறைத்து, கார புளிப்பு சுவைகளைக் குறைத்து. பசித்தால் மட்டும் அளவோடு சாப்பிட்டு. இரவு உணவைச் சமைக்காத உணவாக அல்லது வெறும் பழங்களாக மாற்றிக் கொண்டாளே அவர்களின் எல்ல தொந்தரவும் தீரும். ஆரோக்கியம் மேன்படும்.

ஆரோக்கியமாக வாழ
இரசாயனங்களை அரவே தவிர்த்திடுங்கள். ஆங்கில மருத்துவம் வேண்டாம். பசித்தால் மட்டும் அளவோடு உண்ணுங்கள். பழங்கள், காய்கறிகள் அதிகம் உன்னுங்கள். இரவு சீக்கிரம் படுக்கைக்குச் செல்லுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.

ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவோம்