நோய் கண்டவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விசயங்கள்

1. குணமாக்க முடியாத நோய்கள் என்று எதுவுமே கிடையாது. பிறவியில் வந்தால் கொஞ்சம் கடினம் மற்றபடிக் குணப்படுத்த முடியாத நோய்கள் என்றோ, சாகும் வரை மருந்து சாப்பிட வேண்டிய நோய் என்றோ, உடல் உறுப்புகளை வெட்ட வேண்டிய நோய்கள் என்றோ எதுவுமே கிடையாது. ஆனால் நோய்களைக் குணப்படுத்த தெரியாத மருத்துவர்கள் நிறைய இருக்கிறார்கள்.

2. யாராவது எந்த நோயையாவது குணப்படுத்த முடியாது என்றோ, கடைசிவரை மருந்து சாப்பிட வேண்டும் என்றோ, உடல் உறுப்புகளை நீக்க வேண்டும் என்றோ கூறினால். ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், அவருக்கு மனித உடலின் அமைப்பு பற்றி தெரியவில்லை. அவருக்கு மருந்தைப் பற்றி தெரியும் ஆனால் மருத்துவம் தெரியாது என்று அர்த்தம்.

3. இவர்கள் போன்ற முட்டாள்களை விட்டுவிட்டு உங்களுக்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடிய இயற்கை மருத்துவத்தை நாடுங்கள்.

4. எந்த மருத்துவமாக இருந்தாலும், பணம் பரிப்பதை நோக்கமாகக் கொண்டவர்களாக இருந்தால், நோயைக் குணப்படுத்த முடியாது.

5. எந்த மருத்துவமாக இருந்தாலும், உங்களுக்கு வந்திருக்கும் நோயின் அல்லது உடல் உபாதையின் மூல காரணம் கேளுங்கள். நோயின் மூல காரணமும், அதைத் தடுக்கும் வழிமுறைகளும் தெரியாதவன் மருத்துவனே அல்ல.

6. மருத்துவர்கள் சொல்வதை எப்போதும் 100% நம்பாதீர்கள். நிறையக் கேள்விகள் கேளுங்கள். முறையாகப் பதில் வந்தால், உங்களுக்குத் திருப்தியாக இருந்தால், சிந்தித்து அப்பறம் செயல்படுங்கள்.

7. இயந்திரங்களை நம்பி, மருத்துவ அறிக்கைகளை நம்பி மருத்துவம் செய்யாதீர்கள்.

8. உடல் கழிவுகளை வைத்துக் கொண்டு உங்களுக்கு நோய் உள்ளது கிருமிகள் உள்ளது எனக் கூறுவது சரியான நோயறிதல் முறை அல்ல. அழுக்கோ, கிருமியோ, கழிவில் வெளியேறி விட்டால் உடலின் உள்ளே குறைந்து கொண்டிருக்கிறது என்றுதான் அர்த்தம்.

9. கழிவில் இருந்தால் உடலின் உள்ளேயும் இருக்கும் என்பது சுத்தப் பொய், வியாபார தந்திரம்.

10. சளி, இருமல், காய்ச்சால், புண்கள், வியர்வை, வாந்தி, பேதி போன்றவை உடலின் கழிவு வெளியேற்றம், நோய்கள் அல்ல.

11. எந்த மருத்துவமாக இருந்தாலும், எந்த மருந்தாக இருந்தாலும், மருந்தின் வீரியத்தைப் பற்றியும், அதன் பக்க விளைவுகள் பற்றியும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

12. மருந்தின் பக்க விளைவுகளை பற்றித் தெரியாத, அல்லது கூற மறுப்பவர்களிடம் மருந்து வாங்காதீர்கள்.

13. இந்தக் காலத்தில் எந்த மருத்துவர் இவ்வளவு விவரமாக சொல்லப் போகிறார் என்று உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். நீங்கள் செய்யும் மருத்துவத்தைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்வது உங்கள் உரிமை, சட்டமும் கூட.

14. பெரிய மருத்துவமனை என்றோ, புகழ்பெற்ற மருத்துவமனை என்றோ, நிறைய இயந்திரங்கள் உண்டு என்றோ, நிறைய மக்கள் செல்கிறார்கள் என்றோ எந்த மருத்துவமனைக்கும் செல்லாதீர்கள். உங்களுக்குத் தேவை ஆரோக்கியம் ஆடம்பரம் அல்ல.

15. மரணத்தைக் காட்டியோ, குடும்பத்தைக் காட்டியோ, உடல் உபாதைகளைக் காட்டியோ, எந்த மருத்துவனாவது உங்களைப் பயமுறுத்தினால் உங்களை ஏமாற்றி, மிரட்டி பணம் பரிக்கத் திட்டம் தீட்டுகிறான் என்று அர்த்தம்

16. இயற்கையான விசயத்தைத் தவறென்றோ, இயற்கைக்கு மாறானதைச் சரி என்றோ எவனாவது கூறினால் உங்களை ஏமாற்றுகிறான் என்று புரிந்துகொள்ளுங்கள்.

17. இயற்கை ஒருபோது தவறோ கெடுதலோ செய்யாது, இயற்கையோடு இணைந்து இருந்தால் எந்த மருத்துவமும் தேவையில்லை.