ஐம்பது வயதுவரை நாய் படாத பாடுபட்டு சிறுக சிறுக பணம் சேர்த்து, ஐம்பது வயதில் இல்லாத நோய்களுக்கு மருத்துவம் பார்த்து, மருத்துவர் எனும் வியாபாரிகளிடமும் மருந்து கம்பனிகளிடமும் ஏமாரும் அவல நிலை யாருக்கும் வரக்கூடாது.

சேர்த்த பணத்தை இழப்பது மட்டுமில்லாமல், சொத்து சுகத்தை விற்று, கடன்பட்டு கடைசியில் நோயாளிகளாகவே பலர் இறக்கின்றனர். இல்லாத நோய்க்கு வைத்தியம் பார்த்ததில் சேர்ந்த கடனை அடைக்கமுடியாமல், அவர்கள் பிள்ளைகளும் கடன்காரர்களாகவும், நோயாளிகளாகவும் மாறுகின்றனர்.

இந்த அவல நிலை ஏன் நம் சமூகத்திற்கு உருவானது? அறிவியல், வானியல், மருத்துவம், பொருளியல் என் அனைத்துத் துறையிலும் சிறந்து விளங்கிய நம் இனம் இன்று சீர்கெட்டு கிடக்கக் காரணம் என்ன?. இன்று அனைத்துத் துறைகளிலும் நாம் அடுத்தவரை எதிர்பார்த்து இருக்கிறோம்.

“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்”.

என்று நம் வள்ளுவர் பெருந்தகை சொன்னதைக் கேட்காமல், வெள்ளைக்காரன் சொன்னான், ஜப்பான்காரன் சொன்னான் என்று அடுத்தவன் பின்னால் சென்றதும். நம் முன்னோர்களை முட்டாள்களாக நினைத்ததும் தான் இதற்குக் காரணம்.

திருவள்ளுவர் மருந்து என் தலைப்பில் பத்து பாடல் எழுதியுள்ளார் அதைப் புரிந்து பின்பற்றினாலே நோயின்றி வாழலாம், எல்லா நோய்களும் தீரும். என்ன இல்லை நம்மிடம்?. உலகின் அனைத்து அறிவும், அனைத்து ஞானமும் தமிழ் மொழியில் தான் உள்ளது, ஆனால் படிக்கத்தான் ஆல் இல்லை. அவற்றைப் படிக்காவிட்டால் இழப்பு நமக்குத்தான்.

பாரம்பரிய மருத்துவங்களான சித்தா, யுனானி, ஆயுர்வேத, அக்குபஞ்சர், அக்குப்பிரேசர், நாட்டுவைத்தியம் என் பல இருக்க, இரசாயனங்களை மருந்தாகப் பயன்படுத்திய பிறகுதான். மனிதனின் நோய்கள் முற்ற ஆரம்பித்து உயிரையும் குடிக்க ஆரம்பித்தன.

இன்று சிறிய நோய்கள் பல முற்றி உயிரைக் குடிப்பதற்கு இரசாயன மருந்துகளே காரணம்.

நோய் வந்த பிறகு வைத்தியம் தேடாதீர்கள், நோயின்றி வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.