தூக்கம்
இன்று தூக்கம் சம்பந்தமான தொந்தரவுகள் பலருக்கு இருக்கிறது. தூங்கக் கஷ்டம், தூக்கம் இன்மை, தூக்கம் குறைவு, தூக்கத்தின் பாதியில் விழித்தல், பகலில் தூக்கம் வருவது, வேலைகளுக்கு இடையில் தூக்கம் வருவது எனப் பலருக்கு பல தொந்தரவுகள். பெரும்பாலானோர் ஆங்கில மருத்துவர்கள் பரிந்துரைக்கும் போதை மருந்துகளைப் பயன் படுத்துகிறார்கள். இன்னும் பலர் தூக்கம் இன்றி மன நிம்மதி இன்றி இருக்கிறார்கள். தூக்கம் சம்பந்தமான தொந்தரவுகளுக்கான உண்மை காரணங்களை கொஞ்சம் ஆராய்வோம்.

தூக்கம் என்றால் என்ன
தூக்கம் சம்பந்தமான தொந்தரவுகளைப் பற்றி அறியும் முன்பு தூக்கம் என்றால் என்னவென்று முதலில் அறிந்து கொள்வோம்.

தூக்கம் என்பது மனித உடலும் மனமும் சக்தியை புதுப்பித்து, சக்தி நிலையைச் சமன் படுத்தும் ஒரு ஓய்வு நிலையை அன்றி வேறில்லை.

அனைத்து மனிதருக்கும் ஒரே அளவிலான தூக்க தேவை இருக்காது. தூக்கத்தின் தேவையும், அளவும் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். ஆங்கில மருத்துவர்கள் கூறும் 8 மணி நேரத் தூக்கம் என்பது வெறும் கட்பணையே. ஒரு தனி நபருக்கு எவ்வளவு தூக்கம் தேவை என்பது அவர் உடலின் சக்தி நிலையையும், அவரின் சக்தி உபயோகத்தையும் பொருத்து மட்டுமே அமையும்.

மனிதனின் தூக்க அளவு
ஒவ்வொரு மனிதனின் தூக்கத்தின் அளவும் அவர்களின் வேலை, வாழ்க்கை முறை, உணவு முறை, சிந்தனை, மனதின் தன்மை, உடல் உழைப்பு போன்றவற்றை வைத்து மாறுபடும்.

மூட்டைத் தூக்கும் தொழிலாளி, வாகனம் ஓட்டுநர், ஆசிரியர், வியாபாரி, அலுவலகத்தில் வேலை செய்பவர், இல்லத்தரசி, ஓய்வில் இருக்கும் முதியவர், இவர்கள் அனைவருக்கும் ஒரே அளவிலான தூக்கம் தேவைப் படுமா?.

மேலே கூறப்பட்ட ஒவ்வொருவரின் உடல் உழைப்பும் வெவ்வேறாக இருக்கும், அவர்களின் மன சக்தி செலவினமும் மாறுபடும், உடலின் சக்தி செலவும் மாறுபடும் அதனால் அவர்களின் உடலின் அசதியும் சக்தி தேவையும் கண்டிப்பாக மாறுபடும்.

இப்படி உடலின் மனதின் சக்தியின் தேவைகள் மாறுபடும் பொழுது அவர்களின் சக்தி உற்பத்தி அளவும் கட்டாயம் மாறுபடும். இதனால் தான் சிலருக்கு அதிக தூக்கம் வருவதும், சிலருக்குக் குறைவான தூக்கம் வருவதுமாக இருக்கிறது.

பயம்
நம் தேவைக்கு ஏற்ப தூக்கத்தின் அளவும் தன்மையும் மாறுபடும் என்பதை அறியாதவர்கள், ஆங்கில மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அளவுக்கு நம்மால் தூங்க முடியவில்லை என்றும் தனக்கு ஏதாவது நோய்கள் இருக்குமோ என்று பயப்படுகிறார்கள். இந்தப் பயமே அவர்கள் மனதிலும் உடலிலும் புதிய தொந்தரவுகளை உருவாக்குகின்றது.

தூக்கக் குறைபாடு
தூக்கக் குறைபாடு குறிப்பாகச் சிறுவர்களுக்கும், முதியவர்களுக்கு, இல்லத்தரசிகளுக்கு இருக்கும். இதற்குக் காரணம் சிறுவர்களின் உடல் தூங்காமலேயே சக்தியை அதிகமாக உற்பத்தி செய்யும் ஆற்றலுடன் இருக்கும், முதியவர்களுக்கு, இல்லத்தரசிகளுக்கும், உடல் உழைப்பு குறைவாக இருப்பதால் சக்தி விரயம் இல்லை, அதனால் சக்தி உற்பத்தியின் தேவையும் இல்லை. இதனால் தான் தூக்கம் குறைகிறது.

தூக்கம் குறைவாக தேவைப் பட்டால், உடலில் குறைபாடு உள்ளது என்று அர்த்தம் கிடையாது, மாறாக உடல் விரைவாகச் சக்தியை உற்பத்தி செய்கின்ற ஆற்றலுடன் இருக்கிறது என்று அர்த்தம். குறைவாகத் தூக்குபவர்கள் தான் ஆரோக்கியமான மனிதர்கள்.

ஆரோக்கியமான தூக்க அளவு
நான் முன்பே கூறியது போல, ஒவ்வொரு மனிதனுக்கும் தூக்க அளவு மாறுபடும், ஆனால் குறைந்த பட்ச தூக்க அளவு என்று இருக்குமே என்று கேட்டாள், இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் குறைந்த அளவு 4 மணி நேரம் வரை தூங்கினால் போதுமானது. அதுவும் கண்டிப்பாக இரவு நேர தூக்கமாக இருக்க வேண்டும்.

உடல் மற்றும் மனதின் உழைப்பைப் பொறுத்து தூக்கம் குறைவாகவோ அதிகமாகவோ இருக்கும்.

தூக்கத்தைப் பற்றிய பயம் வேண்டாம்
எனக்குத் தூக்கமே வரவில்லை, எனக்குத் தூக்கம் குறைவாக இருக்கிறது என்று எந்த பயமும் தேவையில்லை. உங்களுக்குத் தூக்கம் குறைவாக இருந்தால், உங்கள் உடலுக்கு அந்தத் தூக்கத்தின் அளவே போதுமானது என்று அர்த்தம்.

உதாரணத்துக்கு நான் முன்பு அதிக நேரம் தூங்குவேன். இரவில் 9-10 மணி நேரம் தூங்கி, பின்பு பகலிலும் 2-3 மணி நேரம் தூங்குவேன். ஆனால் இப்பொழுது இரவில் மட்டுமே, 5-6 மணி நேரம் மட்டுமே தூங்குகிறேன். எனக்கு என்ன நோய் கண்டு விட்டதா?, இல்லை என் உடலும் மனமும் இப்பொழுது தான் ஆரோக்கியமான நிலையில் இருக்கிறது. எனக்குத் தூக்கம் குறைவாகவே தேவை படுகிறது என்று அர்த்தம். 5 மணி நேர தூக்கமே என் உடலுக்கு போதுமானதாக இருக்கிறது.

அதனால் உங்களுக்குத் தூக்கம் குறைவாக இருக்கும் பட்சத்தில், பயம் வேண்டாம் உங்கள் உடலுக்குத் தூக்கம் குறைவாகவே தேவை படுகிறது, நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று அறிக. ஆங்கில மருத்துவர்கள் கூறுவதை நம்பி பயப்பட வேண்டாம். உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க எவ்வளவு நேரத் தூக்கம் தேவை என்பதை உங்கள் உடல் நன்றாக அறியும்.

உங்கள் உடலைத் தவிரவும் உங்களை முழுமையாக அறிந்தவர் வேறு யாரும் இருக்க முடியாது.