வெள்ளை உணவுகள் வேண்டாம்.
புகையிலை மற்றும் மது மட்டும் உடலுக்குத் தீங்கு விளைவிப்பவை அல்ல. தூய வெள்ளை நிறத்தில் உள்ள எல்லா உணவுகளும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும்.

உடலுக்குத் தீங்கு செய்யும் உணவுகள்
– மைதா மாவு
– மாவு வகைகள்
– பாக்கெட் பால்
– பாக்கெட் தயிர்
– பாக்கெட் உப்பு
– வெள்ளை சீனி
– அஜினமொடோ
– சுவையூட்டிகள்
– பட்டைத் தீட்டிய அரிசி
– வெள்ளை நிற பிளையர் கோழி
– வெள்ளை நிற கோழி முட்டை

மற்றும் தூய வெள்ளை நிறத்தில் வரும் எல்லா உணவுகளும்.

இந்த உணவுகள் ஏன் தீங்கானவை
தூய வெள்ளை நிறம் வருவதற்காகப் பல இரசாயனங்கள் அந்த உணவுகளில் கலக்கப்படுகிறது. அந்த இரசாயனங்கள் உடலுக்கு மிகவும் தீங்கானவை. நாம் மேலே குறிப்பிட்ட உணவுகளைச் சாப்பிடும் போது அந்த இரசாயனங்களையும் சேர்த்து தன் சாப்பிடுகிறோம் என்று புரிந்துகொள்ள வேண்டும்.

அது மட்டுமின்றி, அந்த உணவிலிருந்து சில முக்கியமான, உடலுக்கு நன்மை தரக்கூடிய விசயங்கள் நீக்கப் படுகின்றன. இவை நீக்கப்பட்ட பின்பு அந்த உணவுகள், முழுமையான மனித உடலுக்கு உகுப்பான உணவாக இருக்காது.

உதாரணத்துக்குப் பாலின் நிறம் லேசான மஞ்சள் நிறம், பாக்கேட் பாலில் மனிதனுக்கு நன்மை தரக்கூடிய கால்சியமும், கொழுப்பு சத்தும் நீக்கப்பட்ட பின்பு பால், தூய வெண்மை நிறமாக மாறுகிறது. பாலில் இருக்கும் கல்சியம் மற்றும் கொழுப்பு நீக்கப்பட்ட பின்பு மீதம் இருப்பது மனித உடலுக்கு ஒவ்வாத குப்பைகள் மட்டுமே, அதை ஏன் குடிக்க வேண்டும்?

மாவு வகைகளும் அப்படிதான், அரிசி மாவு லேசான மஞ்சள் நிறமாக இருக்க வேண்டும். ஆனால் தூய வெண்மை நிறமாக இருக்கிறது எப்படி?. காரணம் அதில் வெண்மையாக்கக் கூடிய சில இரசாயனங்கள் கலக்கப்படுகிறது.

வெள்ளை உணவுக்குத் தீர்வு
– மைதா மாவு பயன் படுத்தாதீர்கள்

– மாவு வகைகளை பாக்கேட்டில் வாங்காமல், சொந்தமாக அரைத்துக் கொள்ளுங்கள்.

– பாக்கெட் பால் வேண்டாம் கறந்த பால் வாங்குங்கள்

– பாக்கெட் தயிர் வேண்டாம், தயிர் சொந்தமாக உறைய வையுங்கள்

– பாக்கெட் உப்பு வேண்டாம் மூட்டையில் வரும் கல்லுப்பு வாங்குங்கள்

– வெள்ளை சீனி வேண்டாம் நாட்டுச் சர்க்கரை, வெள்ளம் பயன் படுத்துங்கள்

– அஜினமொடோ வேண்டாம்

– சுவையூட்டிகள் வேண்டாம்

– பட்டைத் தீட்டிய அரிசி வேண்டாம், பட்டைத் தீட்டாத அரிசி வாங்குங்கள்

– வெள்ளை நிற பிளையர் கோழி வேண்டாம், நாட்டுக் கோழி சாப்பிடுங்கள்

– வெள்ளை நிற கோழி முட்டை வேண்டாம், நாட்டுக் கோழி முட்டைச் சாப்பிடுங்கள்

செயற்கையாக வெண்மையாக்கப் பட்ட எந்த உணவும் சாப்பிடாதீர்கள், உங்கள் பிள்ளைகளுக்கும், குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் கொடுக்காதீர்கள்.

மனிதனின் மனது மட்டும் வெண்மையாக இருந்தால் போதும், உணவு வெண்மையாக இருக்கக் கூடாது. மனம் வெண்மையாக இருந்தால் ஆரோக்கியம், உணவு வெண்மையாக இருந்தால் நோய்…