தூக்கம் பற்றிய முத்தைய கட்டுரைகளை படிக்காதவர்கள் அவற்றைப் படித்துவிட்டு இதைப் படிக்கவும். 

தூக்கம் குறைவது நோயல்ல, தூங்கக் கஷ்டம், தூக்கம் குறைவாக உள்ளது என்பதெல்லாம் நோய்கள் அல்ல, அவை அனைத்தும் வெறும் கற்பனையே என்பதை முந்தைய கட்டுரைகளில் அறிந்து கொண்டோம். இந்தப் பதிவில் ஏன் அதிகமாகத் தூக்கம் வருகிறது என்பதையும், ஏன் கண்ட நேரங்களில் தூக்கம் வருகிறது என்பதையும் பார்ப்போம்.

அலுவலகத்தில் / வேளையில் தூக்கம்
அலுவலகத்தில் இருக்கும் பொழுதோ, வேலை செய்து கொண்டு இருக்கும் பொழுதோ அசதி, தூக்கம் ஏற்பட்டால். உடலில் சக்தியின் உற்பத்தி குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். உங்களின் உடல் உழைப்புக்கு ஏற்ப உடலால் சக்தியை மீண்டும் உற்பத்தி செய்ய முடியவில்லை என்று அர்த்தம்.

சாப்பாட்டுக்குப் பின்பு தூக்கம்
உணவு உண்பது உடலின் தெம்புக்காக, உடலின் சக்திக்காக என்றால். உணவு உண்ட பின்பு உடலுக்குத் தெம்பும், அதிக சக்தியும் தானே இருக்க வேண்டும். ஏன் அசதியும் தூக்கமும் வருகிறது.

உணவு உண்ட பின்பு அசதியோ தூக்கமோ வந்தால், உடலில் செரிமான மண்டலம் சீர்கெட்டு இருக்கிறது என்று அர்த்தம். பசித்த பின்பு, பசியின் அளவை அறிந்து உண்டால், செரிமான மண்டலம் சீர் அடைந்து. உணவு வேலைகளுக்குப் பின்பு அசதியோ தூக்கமோ வராது.

உடலுறவுக்குப் பின் தூக்கம்
இன்று பல கணவன் மனைவிகள் உடலுறவுக்குப் பின்பு, அசதியாகித் தூங்கி விடுகிறார்கள். உடலுறவுக்குப் பின்பு அசதியோ தூக்கமோ ஏற்பட்டால். உடலில் சக்தியின் உற்பத்தி குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். உங்களின் உடல் உழைப்புக்கு ஏற்ப உடலால் சக்தியை மீண்டும் உற்பத்தி செய்ய முடியவில்லை.

காலையில் எழும் பொழுது எப்படி இருக்க வேண்டும்.
காலையில் எழும் போது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவை பார்த்த இளைஞனைப் போல உற்சாகமாக இருக்க வேண்டும். காலையிலேயே ஏன் எழுந்திருக்க வேண்டும் என்ற என்னமோ, திரும்பப் படுக்க வேண்டும் என்ற என்னமோ இருக்கக் கூடாது.

காலையில் எழும் போது உற்சாகமில்லாமல் உடல் சோர்வாக காணப்பட்டால். உடலில் சக்தி உற்பத்தியும், சக்தி செமிப்பும் முறையாக நடக்கவில்லை என்று அர்த்தம். காலைச் சூரிய உதயத்திற்குப் பின்பு எவ்வளவு தாமதமாக எழுகிறீர்களோ, உங்கள் உடல் அவ்வளவு பலகீனமாக இருக்கிறது என்று அர்த்தம்.

வாழ்க்கை முறையை மாற்றுங்கள் ஆரோக்கியமாக இருங்கள். வாழ்க்கையை வாழுங்கள்.